Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019: குருவினால் ஏற்படும் யோகங்களும் பலன் அடையப்போகும் ராசிக்காரர்களும்

குரு பகவான் முழு சுபகிரகம். விருச்சிக ராசியில் இருக்கும் குரு பகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    03-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    மதுரை: குரு பெயர்ச்சி இன்னும் சில மாதங்களில் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு கோச்சாரப்படி 2,5,7,9,11 ஆகிய இடங்களில் அமரும் போது நன்மைகள் நடைபெறும். குரு பகவான் இந்த முறை மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆசிய ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற யோகங்களையும் பலன்களையும் தரப்போகிறார்.

    குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை குரு பெயர்ச்சி அவரது ராசியான தனுசு ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்மைதான் நடக்கப்போகிறது. குரு பகவானால் சில யோகங்களும் அதனால் நன்மைகளும் ஏற்படுகின்றன.

    குரு பகவான் சந்திரன் வீடான கடகத்தில் உச்சம் பெறுகிறார். சனியின் வீடான மகரத்தில் நீசமடைகிறார். தனுசு, மீனம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்த முறை குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஆட்சி பெற்று அமர்கிறார். தனது ஐந்தாம் பார்வையால் மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுனம் ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்மம் ராசியை பார்க்கிறார். இந்த முன்று ராசிகளைத்தவிர கும்ப ராசிக்கு லாப குருவும், விருச்சிக ராசிக்கு குடும்ப குருவும் குதூகலத்தை தரப்போகின்றனர்.

    குரு சந்திர யோகம்

    குரு சந்திர யோகம்

    குருவும் ,சந்திரனும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ குருசந்திர யோகம் ஆகும். எல்லோருக்கும் குருசந்திர யோகம் பலனளிப்பதில்லை. இரு கிரகங்களில் யாராவது ஒருவர் பாதகாதிபதியாகவோ,மறைவுஸ்தான அதிபதியாகவோ ,நீசம்,வக்ரமடைந்து இருந்தாலோ அல்லது இவர்கள் சேர்ந்து இருக்கும் ராசியாதிபதி நீசம்,மறைவு பெற்றிருந்தாலோ பலனளிக்காது. மேலும் இந்த யோகம் அவ்விரு கிரக திசை நடைபெறும் காலத்திலே அந்த யோகத்தை வழங்கும்.

    செல்வம் செல்வாக்கு

    செல்வம் செல்வாக்கு

    குருமங்கள் யோகம் எனப்படுவது குருவும் செவ்வாயும் இணைந்தநிலை அல்லது சமசப்தம பார்வை. பெற்றால் குரு மங்கள யோகம் உண்டாகும்.

    இதனால் செல்வம் செல்வாக்கு கூடும் புகழ் பொருள் சேரும். குருவுக்கு சந்திரன் ஆறு எட்டு அல்லது 12ஆம் வீட்டில் இருந்தால் அது சகட யோகம், ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக இருக்கும். குருவிற்கு சந்திரன் கேந்திரத்தில் இருந்தால் அது கஜ கேசரி யோகமாகும்.

    குரு சனி சேர்க்கை

    குரு சனி சேர்க்கை

    குருவுடன் சனி அல்லது ராகு சேர்வது குரு சண்டாள யோகம். சிலர் நாத்திகவாதியாக மாறுவார்கள். குருபகவான் தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் சனியை பார்க்கும்போது நல்ல ஆன்மீகவாதியாக ஒருவரை மாற்றுகிறது. குருவோடு கேது பகவான் இணைந்திருந்தாலோ அல்லது கேதுபகவானை குருபகவான் பார்த்து நின்றால் வாக்கு பலிக்கும்.

    குடும்ப குரு குதூகலம்

    குடும்ப குரு குதூகலம்

    எப்பவுமே குரு பகவான் குடும்பத்தில் அமரும் போது அந்த குடும்பத்தை சுபிட்சமடையச் செய்வார். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அப்படித்தான். இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் மேன்மையடையும். சுப நிகழ்ச்சிகள், திருமணம் நடைபெறும். குழந்தைகள் கல்வியில் மேன்மையடைவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    எதிர்பார்ப்பை விட யோகம்

    எதிர்பார்ப்பை விட யோகம்

    எதுவுமே நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தால் நமக்கு அதிக லாபம்தான். அப்படித்தான் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியினால் மிதமிஞ்சிய பலன் கிடைக்கும். எதிர்பார்ப்பு அதிகமாகவே நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் வரும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அற்புதமான குருப்பெயர்ச்சியாக அமையும்.

    குருவின் நேரடி பார்வை

    குருவின் நேரடி பார்வை

    மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருவின் நேரடி பார்வை கிடைக்கப் போகிறது. ஏழில் குரு வந்தால் நேரடியாக ராசியை பார்ப்பார். கடன்கள் அடையும். கேட்கிற வரம் கிடைக்கும். குரு பார்வை நேரடியாக விழுவதால் ஆசைகள் நிறைவேறும். தடைகள் நீங்கும். மன திருப்தியாக இருப்பீர்கள். முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு யோகம் நிறைவேறும். நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வையால் பெரியவர்களின் வாழ்த்துக்கள் ஆசிகள் கிடைக்கும். வேண்டிய வரங்களை கடவுள் கொடுப்பார்.

    அதிர்ஷ்டம் தேடி வரும்

    அதிர்ஷ்டம் தேடி வரும்

    ஒன்பதில் குரு ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு. மேஷம் ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக தேடி வரும் பாக்கியங்கள் உங்களை தேடி வரும். பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்திற்கும் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது அதை அனுபவிக்க தயாராக இருங்கள்.

    லாப குரு நன்மை

    லாப குரு நன்மை

    தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு நகர்கிறார். 11வது இடமான லாப ஸ்தானத்தில் குரு லாபங்களை அள்ளித்தருவார். இதுநாள் வரை பொன் பொருட்களை சேர்க்காதவர்கள் கூட லாபகரமான வசதி வாய்ப்புகளை தருவார். உங்களுக்கு யோகம் கை கூடி வரப்போகிறது.

    இந்த குரு பெயர்ச்சியால் வரப்போகும் யோகங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள் கும்ப ராசிக்காரர்களே.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+