கும்பம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2020: விரைய குருவாக இருந்தாலும் விபரீத ராஜயோகம் தரும்
குரு பெயர்ச்சி உங்களுக்கு விரைய குருவாக சஞ்சரிக்கிறார். குருவும் சனியும் இணைந்து விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: குருபகவான் பொன்னவன். குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு 4, 6, 8ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரம், பார்வையால் கும்பம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்றும் என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.
கடந்த கால கட்டங்களில் மன சஞ்சலம், மன உளைச்சலை சந்தித்து வந்தீர்கள். இனி சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். குரு உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீடான தன ஸ்தான அதிபதி. லாப ஸ்தான அதிபதி. 2க்கு உடைய குரு நீச்சமடைந்து வருவதால் நீங்கள் உங்களின் வாக்கு சார்ந்த விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பிறருக்கு வாக்கு கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்க ராசிநாதன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் நேரத்தில் குரு சனியோடு இணைந்து நீசபங்கமடைகிறார். சகோதரர்கள், உறவினர்களிடமும், கூட்டுத் தொழில் விசயங்களிலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

குடும்பத்தில் சந்தோஷம்
குருவின் பார்வை படும் நான்காம் வீடு சுக ஸ்தானம். தாய் ஸ்தானம். குரு ஐந்தாம் பார்வையாக உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டினை பார்வையிடுவதால் தாய் உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இல்லத்தில் சந்தோஷம் நிம்மதி ஏற்படும். வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகும். கட்டி முடிக்கப்படாமல் இருந்த வீட்டு வேலைகள் விரைவில் முடியும். பிரச்சினையில் இருந்த மண், மனை சார்ந்த விசயங்கள் சுபமாக முடியும்.

வெளியூர் பயணம் வரும்
நான்காம் வீட்டில் உள்ள ராகுவின் மீது குருவின் பார்வை படுவதால் உங்களுக்கு வேலை, தொழிலில் இடம் மாற்றங்கள் நிகழும். வேலை செய்யுமிடத்தில் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வீடு மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வருகிறது. வெளியூர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு தேடி வரும்.

சுப காரியங்கள் நடைபெறும்
புத்திர பாக்கியம் கிடைக்கும் யோகம் வருகிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு இருந்த கடன் சுமை விலகும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக ஆறு மாதம் கழித்து பேசி முடிக்கவும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

பரப்பினைகள் முடிவுக்கு வரும்
குருவின் பார்வை எட்டாம் வீட்டின் மீது விழுவதால் மாங்கல்ய தோஷம் இருந்த பெண்களின் தோஷங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களை விற்கும் போது கவனமும் பொறுமையும் தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. பணம் சார்ந்த விசயங்களில் நிதானம் தேவை.

புதிய பொறுப்புகள்
பத்தாம் வீடு பட்டம், பதவி, பேர், புகழ் தேடி வரும் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொறுப்பு தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகள் வரும் கட்டுப்படுத்துங்கள்.

பரிகாரம் என்ன
குரு பெயர்ச்சியால் முதல் ஆறு மாதங்கள் கவனமாக இருக்கவும். குரு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனை வணங்கி, நவகிரகங்களை வணங்கி நவதானிய விளக்கேற்றி வழிபடவும். உங்களின் பிரச்சினைகள் நீங்கும். சங்கடங்கள் முடிவுக்கு வரும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications