குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷ ராசியில் ராகு உடன் கூட்டணி சேரும் குரு..4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

சித்திரை மாதம் முதல் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கால புருஷ தத்துவப்படி, முதல் வீடான மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரு பகவானுக்கு சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. ஓராண்டு காலம் குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்வார். குரு பகவானின் பயணம், பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

சுப கிரகமான குரு பகவான் ஒரு ராசியை பார்க்கும் போதும், கோச்சாரப்படி 2,5,7,9,11ஆம் இடங்களில் பயணம் செய்யும் போது நன்மைகளை செய்வார். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுப விரையங்களை கொடுத்த குரு பகவான் ராசிக்கு மாறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும். ஜென்ம ராகு உடன் இணையும் ஜென்ம குரு பகவானால் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலை மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றம் ஏற்படும் நினைத்தது நிறைவேறும். தொட்டது துலங்கும் காலமாக இருக்கிறது.புதிய சொத்துக்கள் வாங்கலாம். வாங்கும் சொத்துக்கள், செய்யும் முதலீடுகளில் லாபங்கள் அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்ய கூடவே குரு பகவான் வரப்போகிறார். வேலை விசயங்களில் கவனமும் நிதானமும் தேவை. இருக்கிற வேலையை தக்கவைத்துக்கொள்ளுங்கள். வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடாதீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனம் தேவை. மன உளைச்சல் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். உங்களின் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி விலகி விட்டது. லாப ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் இணையும் குருவினால் உங்களுக்கு திடீர் ஜாக்பாட் தேடி வரப்போகிறது. செய்யும் முதலீட்டில் உங்களுக்கு லாபம் கிடைக்கப்போகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் இழந்த செல்வங்களை மீட்கப்போகிறீர்கள். கையை விட்டு போன பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரப்போகிறது.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

கடகம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கும் இந்த நேரத்தில் குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் ராகு உடன் இணையப்போகிறார். வேலை, தொழிலில் சங்கடங்கள் ஏற்படும். உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். புதிய தொடங்காதீர்கள். பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் ராகு உடன் இணைந்து பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவார். ஒன்பதாம் இட குரு நிறைய லாபத்தை தருவார். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் நிலை உயரும். பண வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடி வரும்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

கன்னி

கன்னி ராசிக்காரர்களே.. ராகு உடன் அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் கூட்டணி சேருகிறார். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பண வருமானமும் அதனால் சுப செலவுகளும் அதிகரிக்கும். வேலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். எதையும் சமாளிக்க தயாராகுங்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசியை விட்டு விலகினாலும் உழைப்புக்கு ஏற்ப வருமானமும் வெற்றியும் கிடைக்கும்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

துலாம்

குரு பகவான் ஏழாம் வீட்டில் ராகு உடன் இணையப்போகிறார். ராகுவின் பார்வையுடன் கூடவே குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அதிக பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற நல்ல புரமோஷனும் கிடைக்கப்போகிறது.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

விருச்சிகம்

ராகு உடன் குரு பகவான் இணைந்து ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் ராகு உடன் இணைவதால் உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. உங்களின் பெயர் புகழ், வளர்ச்சி அதிகரிக்கும். சுப கடன்கள் அதிகரிக்கும். உடலில் ஏற்பட்டிருந்த நோய்கள் நீங்கப்போகிறது. பண வருமானமும் அதிகரிக்கும். சுபத்துவம் அடையும் ராகுபகவான் உங்களுக்கு அத்தனை நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறார்.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது. 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு உடன் இணையப்போகும் குரு பகவான் உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறார். குருவின் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் வேலையில் புரமோஷன் கிடைக்கும். வேலை, தொழில் நன்றாக இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும். நல்ல பண வருமானம் கிடைக்கும் அதே நேரத்தில் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

மகரம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் ராகு உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். முன்னேற்றம் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கஷ்ட காலங்கள் எல்லாம் நீங்கப்போகிறது.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

கும்பம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு உடன் இணையப்போகிறார். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சில நேரங்களில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் செய்யும் பண முதலீடுகளில் அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs

மீனம்

ராகு உடன் குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் இணைவதால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். ராகுவினால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். குருவின் இடமாற்றத்திற்குப் பிறகு சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல சம்பளத்தில் புதிய வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கப்போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உங்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

Guru peyarchi palan 2023 tamil: Guru in alliance with Rahu in Mesham Jackpot for 4 zodiac signs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+