குரு பெயர்ச்சி பலன் 2024: வாழ்க்கையில் முன்னேற்றம்.. திடீர் மாற்றத்தை தரப்போகும் குரு பகவான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பெயர்ச்சி மட்டுமே சித்திரை மாதம் நிகழப்போகிறது. சித்திரை மாதம் முதல் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குரு பகவான் எந்த மாதிரியான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு: குரு பகவான் உங்கள் ராசிநாதன். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு செல்லப்போகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

Guru peyarchi palan 2024: Jupiter transit prediction For Dhanusu and Makaram

12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும். தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது.சுபவிரயமாக மாற்ற வீடு மனை. வாங்கும் வாய்ப்பும் வரும்.வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும்.உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது.இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜீவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது.

மகரம்: கடந்த 5 ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்க்கு வருகிறார். இந்த குருபெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும்.

திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். 11 ஆம் பாவத்தை குரு பார்வையிடுவதால் எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும்.

பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும். வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது.

குரு பகவான் சூரியன், சந்திரன், செவ்வாய் நட்சத்திரங்களில் பயணம் செய்வார். மூவருமே குருவுக்கு நட்பானவர்கள்தான். உங்கள் வாழ்க்கையில் உயர்வான முன்னேற்றத்தை தருவார்கள். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள். நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+