குரு பெயர்ச்சி பலன் 2024: கோடி பலன்களை தரப்போகும் குருவின் பார்வை.. திடீர் ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: 2024ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் நவ கிரகங்களில் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி மட்டுமே சித்திரை மாதம் நிகழப்போகிறது. சித்திரை மாதம் முதல் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குரு பகவான் எந்த மாதிரியான யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு ஏழாம் பாவத்தில் பயணம் செய்யும் குரு பகவான் சித்திரை மாதம் முதல் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தான். குரு பகவானின் நேரடி பார்வையால் யோகத்தை அனுபவித்தீர்கள். சிலருக்கு கடந்த காலங்களில் கினற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது.

கெட்டவன் கொட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்பது போல குருபகவான் நன்மைகளை செய்வார். எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கப்போவதால் உங்களின் பொருளாதார நிலை உயரும். பண வருமானம் அதிகரிக்கும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும்.
கொடுத்த கடன் திரும்ப வரும். வரவேண்டிய பணவருமானம் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பனை செய்வதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகளை நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள். புது வீடு கட்டி குடிபோவார்கள். சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள். புது முயற்சிகள் கை கூடும். தொழில் லாபம் கூடும். உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. வியாழக்கிழமை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானையும் குருபகவானையும் வணங்கலாம். நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் சித்திரை மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானால் சுபகாரியம், திருமணம் நடைபெறும். கூட்டு தொழில் லாபத்தை கொடுக்கும்.
ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்க்கிறார் குரு பகவான். அர்த்தாஷ்டம சனியால் நீங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று வேதனையை உருவாக்கி விட்டது. உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வையிடுகிறார். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.
குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் வெற்றிகரமாக முடியும். வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும். சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பீர்கள். சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வீடு தேடி வரும் கடன்கள் அடைப்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். சித்திரை மாதம் முதல் உங்கள் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது. பிரதோஷ காலங்களில் நந்திக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கிக்கொடுப்பது நல்லது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications