குரு பெயர்ச்சி பலன் 2024: 12 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கப்போகும் அஷ்டலட்சுமி யோகம்.. லக் யாருக்கு?
சென்னை: குரு பகவான் மனிதர்களின் வாழ்க்கையில் சுப காரியங்கள் நிகழ காரணமாக இருப்பவர் பண வருமானத்தை கொடுப்பவர் குருபகவான். மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் இந்த மாத இறுதியில் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். மே மாதம் முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகும் குரு பகவான் சில ராசிக்காரர்களுக்கு அஷ்ட லட்சுமி யோகத்தை தரப்போகிறார்.
துலாம்: 2024ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்களுக்கு அதிக நன்மைகளை செய்யப்போகிறார். குரு பார்வையால் அஷ்ட லட்சுமி யோகமும் குபேர யோகமும் கிடைக்கப்போகிறது. குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மே மாதத்திற்குப் பிறகு குருவின் பயணத்தால் வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். குல தெய்வ தரிசனம் மன அமைதியை கொடுக்கும்.

விருச்சிகம்: உங்களுடைய ராசிக்கு குரு பகவான் ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் உங்களுக்கு தொட்டது துலங்கும். குருவின் பார்வை உங்களுக்கு கிடைப்பதால் குரு பலன் வந்து விட்டது. அடுத்த ஓராண்டிற்கு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கிடைக்கப்போகும் வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தனுசு: 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசி அதிபதி குருபகவானின் உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது. வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவீர்கள். குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு சென்று பயணம் செய்தாலும் உங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. சுப காரியங்கள் கை கூடி வரும்.
மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி. 3ஆம் வீட்டிற்கு அதிபதி. குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் நிறைய நன்மைகள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வையானது உங்களுடைய ராசிக்கு கிடைக்கப்போவதால் குபேர யோகமும் அஷ்ட லட்சுமி யோகமும் கிடைக்கப்போகிறது. மே மாதம் முதல் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக மகர ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. தற்போது 3ஆம் வீட்டில் உள்ள குரு பகவான் மே மாதத்தில் இருந்து நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சுக ஸ்தான குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அஷ்ட லட்சுமி யோகம் தேடி வரப்போகிறது.
மீனம்: உங்களுடைய ராசி அதிபதி குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குருபகவானால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். கடன் பிரச்சினை நீங்கும். குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. குரு ஒன்பது மற்றும் லாப ஸ்தானங்களின் மீது விழுவதால் பண வரவு கிடைக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்கள் கை கூடி வரும். பணம் விசயங்களில் கவனமாக இருங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications