குரு பெயர்ச்சி பலன் 2024: ரிஷபத்தில் அமரும் குரு.. சித்திரைக்குப் பின் உஷாராக இருக்க வேண்டியது யார்
சென்னை: குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் பார்வை ரிஷப ராசியில் இருந்து கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
மிதுனம் விரைய குரு: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. தொழில் ஸ்தான அதிபதி. குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் அமரப்போவதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. நிறைய பணவருமானம் வந்தாலும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும். குருபகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடு, ஆறாம் வீடு, மற்றும் எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. நடுத்தர வயதுடையவர்களுக்கு யோகம் வரும்.

வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல செய்திகள் தேடி வரும். பரிகாரத்திற்காக நீங்கள் தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு கைலாயநாதர் கோவிலுக்கு சென்று வரலாம். கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க பாதிப்புகள் குறையும்.
சிம்மம் கர்ம குரு: குரு பகவான் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி அஷ்டம ஸ்தான அதிபதி தற்போது பாக்ய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தில் அமரப்போகிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்பார்கள். தொழில் அல்லது வேலையில் மாற்றங்கள் நிகழும். அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும். மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பதவியில் கவனம்: பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருபகவான் சில நேரங்களில் பதவியை கொடுப்பார். ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையை பொருத்து நன்மைகள் நடைபெறும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது விழுகிறது. பணம் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட பாதிப்புகள் குறையும்.
துலாம் அஷ்டம குரு: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு குரு மூன்று மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. குரு உங்க ராசி அதிபதிக்கு பகைவர். அஷ்டம குரு பாதிப்புதான் என்றாலும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி அஷ்டம ஸ்தானத்தில் அமர்வது விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது. 2024ஆம் ஆண்டு முதல் உங்கள் பிரச்சினைகள் குறையும் உதவிகள் தேடி வரும். தஞ்சாவூர் மாவட்டம் தென் திட்டை ராஜகுருவை வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு ருண ரோக சத்ரு குரு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு குருபகவான் எப்போதுமே நன்மைகளை மட்டுமே செய்வார். குரு உங்கள் ராசி அதிபதி மட்டுமல்லாது நான்காம் வீட்டிற்கு அதிபம். ஆறாம் வீட்டில் குரு மறைகிறார் என்பதால் பண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்றாலும் கடன் நோய் பிரச்சினைகள் வெளிப்படும். அதிகமாக கடன் வாங்க வேண்டாம்.
கடன் வாங்காதீர்கள்: ஆறாம் வீட்டில் குரு அமரும் போது அதிகமாக கடன் வாங்க வைப்பார். அதுவே மன அழுத்தத்தை தரும்.
புதிய முயற்சிகள் எதையும் செய்யாதீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். நீங்க எப்படி கடன் வாங்கக் கூடாதோ அதே போல உங்க பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்காதீங்க. தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளுங்கள். மேதா தட்சிணா மூர்த்தியை வணங்க பாதிப்புகள் குறையும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு 60 சதவிகித நன்மையை தரும்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு உங்களுடைய ராசிக்கு 2 மற்றும் லாப ஸ்தான அதிபதி. 2024ஆம் ஆண்டில் மே மாதம் நிகழப்போகும்
குரு பெயர்ச்சி நிறைய நன்மைகளையும், சில பாதகங்களையும் தரப்போகிறது. சுக ஸ்தானம், வீடு வாகன ஸ்தானத்தில் வண்டி வாகனம் வாங்கும் போது எச்சரிக்கை தேவை. நன்றாக செக் செய்து வாங்குங்கள். ஏற்கனவே ஜென்ம ராசியில் சனி இருந்து கடும் பிரச்சினைகளை கொடுத்து வருகிறார். அம்மா, மனைவி உடல் நலனில் கவனமாக இருங்க. பாடி திருவலிதாயம் சென்று குருபகவானை வணங்க பாதிப்புகள் குறையும்.
மீனம்: உங்களுடைய ராசி அதிபதியும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியுமான குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்தாலும் மறையப்போகிறார். குருபகவானின் பயணம் சாதகமாக இல்லாவிட்டாலும் குரு பகவானின் பார்வை உங்களுக்கு நிறைய நன்மைகளையும் சாதகத்தையும் தரப்போகிறது. சிறு தூர பயணங்கள் நன்மை செய்யும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்க்கிறார். திருமண சுபகாரியம் கைகூடி வரும். பாக்கியங்கள் கிடைக்கும், செய்யும் தொழிலில் லாபம் வரும்.
பரிகாரம்: குரு பகவான் மீனம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டினையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் திருமணம் கைகூடும், சகோதர சகோதரி வகையில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பண விசயங்களில் கவனம் தேவை. பாதிப்புகள் குறைய நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்கவும். குருவித்துறையில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். குரு பெயர்ச்சி நாளில் இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications