2 நாட்களில் குரு வக்ர பெயர்ச்சி.. மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு என்ன நடக்கும்? முழுமையான பலன்
சென்னை: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் மேஷம் , ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
மேஷ ராசிக்கு நடக்க போகும் விஷயங்கள்:
நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது.

தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். .ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மணவாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும்.மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும். மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.
வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரங்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலே உங்களுக்கு திருமணம் கைகூடும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு.
பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு. ஏற்கனவே திருமணம் ஆனவர்ளுக்கு கணவன் மனைவி தனி தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிலருக்கு டைவர்ஸ் செய்ய வேண்டிய மோசமான சூழல் கூட ஏற்பட்டது.இன்னும் சில மீனா ராசிக்காரர்களுக்கு கடுமையான கடன் நிலவி வந்தது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை இருந்தது.
ரிஷப ராசி:இந்த காலத்தில் உங்கள் உறவுகள் மேம்படும். அன்புக்குரியவர்களுடன் ஆழமான இணக்கமான உறவு உண்டாக்கும். வேலையில் எதிர்பாராத பாராட்டு அல்லது அங்கீகாரம் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சிறந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும்.நிதி எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அல்லது சேமிப்பு வாய்ப்புகள் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். கடன்கள் குறையும். அதிகம் பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வீர்கள்.
தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும். சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு பணத்தை கொடுக்கும். அடுத்த 1 வருடம் உங்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பொருளாதார ரீதியாக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்: எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். பொறுப்புகளை புறக்கணித்தல் வேண்டாம். எந்த பணியை செய்தாலும் கவனமாக இருங்கள்.
ஏமாற்றம்: எதிர்பார்க்கப்படும் சில விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனை வரலாம். கவனச்சிதறல் ஏற்படும். கவனமாக வாகனம் ஓட்டுங்கள். விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உடல் பிரச்சனைகள் ஏற்படலாம். அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் . உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு கறிவிருந்து வைக்கவும்.
மிதுன ராசிக்கு நடக்க போகும் விஷயங்கள்; வாழ்க்கை உங்களுக்கு இனி ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம் அடையும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேளையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.
நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில் கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
தோல்விகளை மறைக்க வெளியே கோபமாக செயல்படுவது.. உங்களிடம் யாரும் துணிந்து பேச முடியாத அளவிற்கு முரட்டு தனமாக இருப்பது என்று இத்தனை காலம் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள் இனி அந்த நிலை இருக்காது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications