சொந்த வீட்டில் குடியிருக்கும் யோகம் தரும் செவ்வாய் - முருகனை சரணடையுங்கள்
சொந்த வீடு, வாசல் யோகம் அமைய செவ்வாய் பகவான் அருள் வேண்டும். இவர் அருள் இருந்தால்தான் பூர்வீகச் சொத்துகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும்.
சென்னை: சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெற முடியும். தடையின்றி வீடு கட்ட செவ்வாய் பகவானின் அருள் வேண்டும்.
சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருக்கிறது என்பதே மகிழ்ச்சியானது.
மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். செவ்வாய் பூமிகரகன். இவர் அருள் இருந்தால்தான் பூர்வீகச் சொத்துகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும்.

செவ்வாய் பகவான் ஆசி
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா? வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும். நவகிரகங்களில் சூரியனுக்குஅடுத்தபடியாக பராக்கிரமம் மிக்கவராக, செயல் ஆற்றல் உள்ளவராகக் கருதப்படுபவர் இவர். பூர்வீகச் சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றைத் தீர்மானிப்பவர் செவ்வாய்.

சுகஸ்தானம் எப்படி?
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் ரியல் எஸ்டேட், நிலம் வாங்கி விற்கும் தொழில், கட்டடத் தொழில், சிவில் இன்ஜினியரிங் போன்றவற்றில் புகழும், பணமும் குவியும். ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும், கடன் வாங்கி வீடு வாங்கினாலும், மூதாதையர் சொத்து மூலம் வீடு கிடைக்கும் அமைப்பு இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் வேண்டும். பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமைந்த கிரகங்களின் அடிப்படையிலும் சுகஸ்தானம் என்று சொல்லப்படும் அமைப்பும், பஞ்சமா ஸ்தானம், பாக்கியஸ்தானம் மற்றும் லக்கினாதிபதி அது போன்று இன்னும் வேறு சில அமைப்புகளும் அமர்வு, பார்வை, சேர்க்கை போன்றவற்றால் பாதிக்கப்பட கூடாது.

சுக்கிரன் பலம் அவசியம்
சொந்த வீடு அமைய ஜாதகத்தில் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும். ஜாதக கட்டத்தில் வசிப்பிடம், சொந்த வீடு, என்பதைப் பற்றி லக்னத்திற்கு நான்காம் வீடான சுகஸ்தானம் உணர்த்துகிறது. சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமக்கு பாக்கியம் தேவை. செவ்வாய் பூமிக்காரகன். நமக்கு பலவகையில் சொத்து சேரவேண்டும் என்றால் செவ்வாயின் பரிபூரண அருள் தேவை. பூமி செவ்வாய் என்றால் அந்த நிலத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் சுக்கிரன். ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டியதும் மிக அவசியம்.

திடீர் யோகம்
நான்கு, ஐந்து, ஒன்பது ஆகிய ஸ்தானங்களில் அல்லது அதன் அதிபதிகளின் சாரம் அல்லது அந்த கிரகங்களுடன் 6, 8, 12ம் அதிபதிகள் சேரும்போது, பரிவர்த்தனை அல்லது ஒருவரை ஒருவர் சமசப்தமமாகப் பார்க்கும்பொழுது அந்த தசா யோக அம்சத்தில் இருந்தால் திடீரென்று செல்வம், செல்வாக்கு, சொத்து குவியும். நீசகிரகம் நீச்ச பங்கமாகி சையை நடத்தும்போது அதேபோன்று ராஜயோக பலன்கள் கிடைக்கும். பெரிய செல்வந்தர்களுக்கு பினாமியாகும் வாய்ப்பு உண்டாகும். ராசிக்கு சனி 4ல் வரும் போது இடமாற்றம், ஊர் மாற்றம், சொந்த வீட்டில் பால் காய்ச்சும் யோகம் இருக்கும்.

திருச்செந்தூர் முருகன்
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்தவீடு அமையும். நிலம், வீடுவாங்கு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும். நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை உச்சரித்து, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும். தடையின்றி வீடு கட்டலாம்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications