ஜூலை மாத ராசி பலன் 2022: தேடி வரும் குருபலன்..குதூகலத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
சூரியன் இடப்பெயர்ச்சி புத ஆதிபத்ய யோகத்தால் ஜூலை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூலை மாதம் ஐந்து கிரகங்கள் வரிசையாக ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன. அபூர்வ யோகம் கைகூடி வரும் இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிநாதன் புதன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து புதனுடன் பயணம் செய்கிறார். புத ஆதிபத்ய யோகம் பெற்று பயணம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வது விபரீத ராஜயோக அமைப்பாகும். செவ்வாய், ராகு இணைந்து பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கின்றனர். குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுவது சிறப்பான அம்சம். ஆறாம் வீட்டில் சனி ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார்.

பதவி உயர்வு கிடைக்கும் மாதம்
கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு நிறைய யோகங்கள் கை கூடி வருகிறது. குருவின் நேரடி பார்வையால் திருமண யோகம் கை கூடி வருகிறது. பத்துக்கு அதிபதி புதன் சூரியனோடு இணைந்து பயணம் செய்வதால் பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்கும் இடத்தில் டிரான்ஸ்பர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப்பாதையை காட்டும்.

குடும்பத்தில் கவனம்
ஆறாம் வீட்டில் உள்ள சனிபகவான் வக்ரமடைந்து பின்னோக்கி பயணம் செய்து ஐந்தாம் வீட்டிற்கு வருகிறார். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் உயர்கல்விக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சின்னக் சின்ன குழப்பங்கள் வரலாம். செவ்வாய், ராகுவின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்பத்தின் மீது விழுகிறது. இரண்டாம் வீட்டில் ஏற்கனவே கேது பயணம் செய்வதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

சுபகாரியங்கள் கைகூடும்
குரு பலன் கிடைப்பதால் திருமணம் சுப காரியம் கைகூடும். காதல் வாழ்க்கை இனிமையை அதிகரிக்கும். மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். இரண்டாம் அதிபதி சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கப்போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு, பானங்களில் கவனம் செலுத்துவது அவசியம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். பைரவர் வழிபாடு பயத்தை போக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications