ஜூலை மாத ராசி பலன் 2022.. விபரீத ராஜயோகம், புத ஆதிபத்ய யோகத்தால் திக்குமுக்காடும் ராசிக்காரர்கள்
ஜூலை மாதம் மிதுன ராசிக்காரர்களின் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். சனிபகவானால் விபரீத ராஜயோகம் கூடி வரும்.
சென்னை: மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அற்புதமான மாதமாக அமையப்போகிறது. விபரீத ராஜயோகம் தேடி வரும் மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது. பண வருமானம் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் கை கூடி வரும் மாதமாக அமைந்துள்ளது. நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் இந்த மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். சந்திரன் மாத முற்பகுதியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு நிறைய அற்புதங்கள் நிகழப்போகிறது. காரணம் உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்து சூரியனுடன் இணைந்து பயணம் செய்வார். புத ஆதிபத்ய யோகம் கிடைக்கப்போகிறது. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.

வேலையில் மாற்றம்
பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்கிறார். பத்தில் குரு பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார். குருவின் பார்வையும் சாதகமான வீடுகளின் மீது விழுவதால் உங்களுக்கு நிறைய பண வரவு வரும். வேலை, தொழிலில் நிறைய முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் பணிக்கு பாராட்டுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் புகழ்ச்சியும் கிடைக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான மாதம். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.

விபரீத ராஜயோகம்
12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் விரைய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. இது விபரீத ராஜயோக காலமாகும். மனதில் நிம்மதியும் ஏற்படும். திடீர் பண வரவுகள் வந்து திக்குமுக்காட வைக்கும். யோகங்கள் நிறைந்த காலகட்டமாகும். இந்த கால கட்டத்தில் வரும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

லாபமான மாதம்
லாப ஸ்தானமான 11வது வீட்டில் செவ்வாய் பகவான் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். பண முதலீடுகள் இரட்டிப்பாகும். பங்குச்சந்தை முதலீடுகளில் செய்யும் லாபம் இரட்டிப்பாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு தேடி வரும். மூத்த சகோதரரின் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் பாக்கெட்டில் பணம் நிறையும் மாதமாக இது அமைந்துள்ளது.

குடும்பம் குதூகலம்
குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை, செவ்வாயின் பார்வை கிடைப்பதால் குரு மங்கல யோகம் கூடி வந்துள்ளது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும். இளையவர்கள் காதல் வயப்படுவீர்கள். காதல் கைகூடும் கல்யாணத்தில் முடியும். மொத்தத்தில் ஜூலை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதமாகும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த அற்புதமான மாதமாக அமைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications