ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு... எந்த ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் அதிகம்
ஜூலை மாதம் பிறந்து விட்டது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பணம் வரும் வாய்ப்பு எப்படி, காதல் உணர்வுகள் எப்படி என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை மிதுனத்தில் இருக்கும் சூரியன் 17ஆம் தேதி கடகத்தை நோக்கி நகர்கிறார். இந்த மாதம் இரண்டு கிரகணங்கள் இருக்கின்றன. ராகு சூரிய கிரகணம், கேது சந்திரகிரகணம் நிகழ உள்ளது ஆனாலும் அச்சம் வேண்டாம்.
ஜூலை மாதம் சூரியனுக்கு உகந்த தினமான ஞாயிறன்று பிறந்து உள்ளது. சூரியன் மிதுனத்திலும் கடகத்திலும் சஞ்சரிக்கும் மாதம் ஜூலை மாதம். தென்மேற்கு பருவமழை சீராக கொட்டித்தீர்க்கும் மாதம். பூமி எங்கும் நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் மாதம் ஜூலை.
எங்கு பார்த்தாலும் பசுமையாக காணப்படுவதால் வைகாசியில் திருமணம் முடித்தவர்கள், காதலர்கள் அதிகம் ஜோடியாக டேட்டிங்,அவுட்டிங் என்று சுற்றித்திரிவார்கள், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

மேஷம்
வீரத்தின் நாயகன் செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்களே... குடும்ப வாழ்க்கையில் உற்சாகமாக இருக்கும். விருந்து விசேஷங்களினால் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த மாதம் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகம் மூலம் பண வரவு காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நரம்பு அல்லது தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் காதல் துணையை தேர்ந்தடுக்கும் போது கவனம் தேவை.வைத்தியநாத ஸ்வாமியை வணங்குங்கள். 5,6,7,10,1519,28 ஆகிய தினங்களில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு ஏற்ற மாதம். தம்பதியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். வீட்டில் மங்களரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த மாதம் பணம் வருவாய் இருப்பதை விட செலவுகள் அதிகமாகவே காணப்படும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் பணம் சேமிக்கலாம். தொழில் வியாபாரம் உற்சாகமாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எரிச்சல் அடையவேண்டாம். காலை நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். 7, 9, 11, 17, 19, 27, 29 ஆகிய நாட்களில் கவனம் தேவை.

மிதுனம்
புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே... இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சூரியன் கடகத்திற்கு இடம் மாறுகிறார். காதல் துணையுடன் ரொமான்ஸ் அதிகரிக்கும் மாதம். தம்பதிகளுக்குள் உறவு இயல்பானதாக இருக்கும். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும் நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டமிடுங்கள். உடலுக்குள் பதுங்கியிருக்கும் நோய் அவ்வப்போது வெளிப்படும். புதன் பூஜை செய்வதன் மூலம் உடலை உற்சாகப்படுத்துங்கள். யோகா பயிற்சி செய்யவும். 5,8, 13, 15, 19, 23,25,27,28,30 தினங்கள் சுமாரான நாட்கள் கவனம் தேவை.

கடகம்
மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே... தம்பதிகள் அன்யோன்யமாக காணப்படுவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். உங்களைப் புரிந்து கொள்ள உங்கள் காதல் துணைக்கு அவகாசம் கொடுங்கள். காதல் துணையுடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த மாதம் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் மருத்துவமனையில் படுக்க வைத்து விடும். ஸ்ரீ வைத்தியநாத சுவாமியை திங்கட்கிழமைகளில் வணங்குங்கள் உடல் நலம் சீராகும். 3,6,12, 15, 18, 21, 28 ஆகிய நாட்களில் கவனமாக செயல்படவும்

சிம்மம்
தந்தைக்காரகன் சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... நிதி நிலமை சீராக இருக்கும் பணம் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அதிக நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அன்பாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்வார். உங்கள் துணையுடன் நீங்கள் இனிமையாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உடலில் சின்னச் சின் கோளாறுகள் ஏற்படும். வைத்தியநாதரை வணங்குவதன் மூலம் வாயு தொந்தரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். 7, 9, 12, 18, 19, 22, 26, 28 நாட்களில் கவனம் தேவை.

கன்னி
புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே... இந்த மாதம் உங்களுக்கு உற்சாகமான மாதமாக இருக்கும். தம்பதிகளிடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உங்கள் துணையிடம் அதிக அக்கறை காட்டுவீர்கள். காதல் செய்ய ஏற்ற மாதம் இது என்பதால் உற்சாகம் களைகட்டும். நிதி நிலைமை சுமாராகவே காணப்படும் என்றாலும் உல்லாச பயணம் செல்ல ஏற்ற மாதம் இது. கன்னி ராசிக்காரர்கள் உடல் நலனில் அக்கறையோடு செயல்படுவது அவசியம். புதன்கிழமைகளில் புத பகவானை வணங்குவதன் மூலம் நரம்பு தொடர்பான நோய்களில் இருந்து தப்பலாம். 5,8, 13, 15, 19, 23,25,27,28,30 தினங்கள் சுமாரான நாட்கள் கவனம் தேவை.

துலாம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே... உங்களுக்கு ஜூலை மாதம் காதல் செய்ய ஏற்ற மாதமாகும். உங்கள் வாழ்க்கைத்துணைவர் உங்களை அதிக காதலுடன் நடத்துவார். தம்பதியரிடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் இந்த மாதம் சீராகவே இருக்கும். துடிப்புடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். 7, 9, 11, 17, 19, 27, 29 நாட்களில் கவனமாக செயல்படவும்.

விருச்சிகம்
செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே.. இந்த மாதம் உங்களுக்கு உற்சாகம் அதிகமாக இருக்கும்.உங்கள் காதல் வாழ்க்கைக்கு ஏற்ற மாதம் இது. காதல் மணியடிக்கும் காலம் வந்தாச்சு... திருமணம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒருவரிடம் நீங்கள் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். நீங்கள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய மாதம். வயிறு பிரச்சினைகள் ஏற்படும். வைத்தியநாத சுவாமியை செவ்வாய்கிழமையன்று வழிபடுங்கள்.

தனுசு
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே... உங்களுக்கு உற்சாகமும், ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும் மாதமாகும். ரொமான்ஸ் அதிகம் நிறைந்த மாதம் இது. உங்கள் காதல் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். இந்த மாதம் உல்லாச பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். பணம் வருவாய் இந்த மாதம் அதிகமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளும் அதிகரிக்கும் கவனமாக செலவிடவும். அலர்ஜி, தோல்நோய்கள் ஏற்படும். நோய்களை சரி செய்ய புதன் பகவானை வணங்கவும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திர சாத்தி வழிபடவும். 7 , 8 , 12 , 16 , 22, 27,28 ஆகிய தினங்களில் கவனமாக இருக்கவும்.

மகரம்
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதமிது. காதல் உணர்வுகள் களைகட்டும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகமாகவே காணப்படும். நன்மைகள் நிறைந்த மாதமிது. வாழ்க்கைத் துணையுடன் இணைந்து இனிமையான நேரத்தை செலவு செய்வீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதால் காதல் விவகாரங்களும் அதிகம் உற்சாகம் நிறைந்ததாகவே காணப்படும். உங்கள் துணையிடம் அன்பாக பொறுமையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு சுமாராகவே இருக்கும் என்பதால் செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள். 3, 7,9,12,15,19,21,25,28,30 ஆகிய நாட்கள் சுமாரான நாட்கள் கவனமாக இருக்கவும்.

கும்பம்
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே... இந்த மாதம் உங்களுக்கு உற்சாகம் குறைவாகவே காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய மாதம் இது. வேலையில் பிசியாக இருப்பீர்கள் வாழ்க்கை துணையை கவனிக்கவும் நேரம் செலுத்துங்கள். இந்த மாதம் செலவுகள் அதிகமாக காணப்படும். உணவு விசயத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செலம் போது கவனமாக இருக்கவும். 6,7,9,17,19,23,28,30 அகிய நாட்களில் கவனமாக இருக்கவும்.

மீனம்
குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... ஜூலை மாதம் உங்களுக்கு உற்சாகம் தரும் மாதமாகும். முன்னேற்றம் தரும் மாதம் இது என்பதால் நீங்கள் உங்கள் காதல் துணையுடன் கலகலப்பாக இருப்பீர்கள். தம்பதியரிடையே வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளும் முடிவை சற்றே ஒத்திப்போடுங்கள். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். பழங்கள், காய்கறிகளை சாப்பிடுங்கள். 6, 9, 11, 20, 22, 28, 29,30 ஆகிய நாட்களில் கவனமாக இருக்கவும்.












Click it and Unblock the Notifications