Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் யோகம் வரும் என்று ராசி பலன்கள் மூலம் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் பலன்கள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

Recommended Video

    ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதம்

    இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மிதுன ராசியில் வக்ரம் அடைந்த புதன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிக்க விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் வக்ரமடைந்த சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

    கிரகங்களின் இடமாற்றத்தை பார்த்தால் ஜூன் 2ஆம் தேதி கடக ராசியில் நீசமடைந்து பயணம் செய்கிறார். புதன் ரிஷப ராசிக்கு நகர்கிறார். ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 20ஆம் தேதி குரு வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 22ஆம் தேதி புதன் வக்ர சஞ்சாரம் முடிகிறது. சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி நீசம் பெற்ற செவ்வாய் உடன் இணைகிறார்.
    இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் ஜூன் மாதத்தில் இந்த நான்கு ராசிகளின் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

     மேஷம்

    மேஷம்

    செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, வரும் 2ஆம் தேதி ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் அடைகிறார். இந்த நீச்சம் பெற்ற செவ்வாயை வக்ரம் பெற்ற சனி பகவான் மகர ராசியில் இருந்து பார்க்கிறார். இதன் மூலம் செவ்வாயின் நீச்சத் தன்மை நீங்கி விடும். பத்தாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை செவ்வாயின் மீது விழுவதால் வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்கும் லாபம் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பலம் தைரியம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் புதன் ராகு உடன் இணைவதால் பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். சொல்லை விட செயலில் அதிக கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சுக்கிரன் உடன் இணைகிறார். மூன்றாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் இணைவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வ ஜென்ம பலன் கிடைக்கும். 22ஆம் தேதி சுக்கிரன் செவ்வாய் உடன் இணைவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். மொத்தத்தில் ஜூன் மாதம் மேஷ ராசிக்காரர்களு ஆதாயங்கள் அதிகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

     ரிஷபம்

    ரிஷபம்

    சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ஜூன் மாதம் சூரியன் உங்கள் ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணிக்கிறார். சுக்கிரன் இரண்டாம் வீட்டிலும் 3ஆம் வீட்டிலும் பயணம் செய்கிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிர்பார்க்காத திடீர் வாய்ப்பு கிடைக்கும். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் கிடைக்கிறது. சுக்கிரன் வீட்டில் புதன், புதன் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பலன்கள் யோகமாக மாறும். குடும்ப தேவைகள் நிறைவேறும். வக்கிரம் பெற்ற சனியால் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சுக்கிரன் மீது குருவின் பார்வை விழுகிறது. சுகங்கள் அதிகம் உண்டாகும். பயணங்களைத் தவிர்த்து விடவும்.
    செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று நீசமடைகிறார். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் ரிஷபத்தில் ராகு, புதன், சூரியன் பயணம் சஞ்சரிப்பதால் பொருள் சேர்க்கை ஏற்படும். இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகுவின் பயணம் திடீர் யோகத்தைக் கொடுக்கும். மனதை சந்தோஷப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க நல்ல மாதம். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

     மிதுனம்

    மிதுனம்

    புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் உள்ள சூரியன் உங்கள் ராசிக்கு வருகிறார். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ராசியில் உள்ள செவ்வாய் 2ஆம் தேதி கடக ராசியில் நீசமடைகிறது. குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும் இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். பல நாட்கள் போராட்டம் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை கை கூடி வரும் காரணம் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்கிறார். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அஷ்டமத்து ஸ்தானத்தில் உள்ள சனி வக்ரமடைந்திருப்பதால் பொறுமை நிதானம் தேவை. குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

    கடகம்

    கடகம்

    கடக ராசிக்கு ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். ராசிக்கு வரும் செவ்வாய்க்கு ஏழாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை கிடைக்கிறது. ஐந்தாம் வீட்டில் கேது,ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் ராகு, விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியன் ராகு உடனும் மாத பிற்பகுதியில் சுக்கிரன் உடனும் பயணம் செய்கிறார். சந்திர மங்கல யோகம் கிடைக்கும் போது நீங்கள் செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். செவ்வாயின் பார்வை சந்திரன், குருவின் மீது விழும் போது நல்ல சம்பவங்கள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஆதாயம் கிடைக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுப விரைய செலவுகள் வரும். நீண்ட நாள் ஆசைகள், முயற்சிகள் நிறைவேறும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் தொழில் ஸ்தானத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். கண்டகச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அக்கறை தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம் ஒத்திப்போடவும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+