Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசி பலன் 2022..அஷ்டமத்து சனி.. இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டியது யார் தெரியுமா?

ஜூன் மாதத்தில் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படியிருக்கும் என்னென்ன யோகங்கள் தேடி வரப்போகிறது என்று தெரிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன யோகங்கள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே... உங்களுக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தருகிறார். ராசி அதிபதி சந்திரன் பயணமும் இணைந்து பலத்தை தரப்போகிறார். சனிபகவான் அஷ்டமத்து சனியாக அமர்ந்து தடையை தருவார் என்றாலும் குருவின் பார்வை பலத்தால் நன்மைகள் நடைபெறும்.

யோகம் தரும் பலன்கள்

யோகம் தரும் பலன்கள்

தர்ம கர்மாதிபதி யோகம் இந்த மாதம் செயல்படப்போகிறது. பல எதிர்ப்புகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். நெருக்கடியான பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வீர்கள். வேலையில் திடீர் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அனைத்தையும் பொறுப்புணர்வோடு சமாளித்து விடுவீர்கள்.

சனி ஏற்படுத்தும் தடைகள்

சனி ஏற்படுத்தும் தடைகள்

ஆட்சி பெற்ற சந்திரன் மனதிற்கு இனிய காரியங்களை நிகழ்த்தி கொடுப்பார். எனவே சந்திராஷ்டம நாட்கள் தவிர்த்து புதிய முயற்சிகளை செயல்படுத்துங்கள் வெற்றிகள் கை கூடி வரும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசுவதற்கு காலம் கூடி வந்தாலும் சில தடைகள் வர வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்கள் உற்சாகத்தை தரும். சின்னச் சின்ன குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது விட்டுக்கொடுத்து செல்லவும். திருமணம் கை கூடி வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

சூரியன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கால்களில் கவனம் தேவை. சின்னச் சின்ன வலிகள் வந்து நீங்கும். திடீர் செலவுகள் வந்து போகும். மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையோடும் கவனத்தோடும் இருங்கள். அதிக கவனச்சிதறல் ஆபத்தை ஏற்படுத்தி விடும். எதிர்பார்க்காத வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் யோகங்கள் நிறைய உள்ளதால் எதையும் எளிதில் சமாளிக்கும் மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+