ஜூன் மாத ராசி பலன் 2022..சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படியிருக்கும் என்னென்ன யோகங்கள் தேடி வரப்போகிறது என்று தெரிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன யோகங்கள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. சாமர்த்தியசாலி நீங்கதான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல பேசி எதையும் சமாளிப்பீர்கள். ராசி அதிபதி புதன் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய திட்டங்களில் வெற்றிகள் கிடைக்கும். எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

காதல் கைகூடி வரும்

காதல் கைகூடி வரும்

காதலிப்பவர்களுக்கு நல்ல மாதம் காதல் கைகூடி வரப்போகிறது. காதல் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. போராட்டங்களைத் தாண்டி வெற்றிகரமாக திருமணம் நடைபெறும். ராசி அதிபதி மறைந்தாலும் நிறைந்த யோகத்தை தரப்போகிறார். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். உங்களின் அந்தஸ்து புகழ் அதிகரிக்கும். நிறைய வரவுகள் வரும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும்.

கல்வி யோகம் தேடி வரும்

கல்வி யோகம் தேடி வரும்

மறைந்த புதன் நிறைந்த கல்வியைத் தரப்போகிறார். மாணவர்களுக்கு கல்வியில் யோகம் கூடி வருகிறது. வெளிநாடுகளில் சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்லைன் கல்வி படிப்பவர்களுக்கு தெளிவு பிறக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வெற்றிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு திடீர் புரமோசன் கிடைக்கும்.

வீடு மனை வாங்கலாம்

வீடு மனை வாங்கலாம்

புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு மனை வாங்கலாம். நிறைய சொத்து சேர்க்கை ஏற்படும். குழந்தைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இளம் பெண்களுக்கு அழகும் பொலிவும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது அவசியம். வெளிநாட்டு வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னோர்களின் அருளும் குல தெய்வ அருளும் உங்களுக்கு கிடைப்பதால் வெற்றிகள் தேடி வரும் மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+