ஜூன் மாத ராசி பலன் 2022.. லாபங்களை அள்ளிக் குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் லாபமும் யோகமும் வரும் என்று பார்க்கலாம். ஜூன் மாத ராசி பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. இந்த மாதம் உங்கள் ராசிக்கு பத்து மற்றும் 11 ஆம் வீடுகளில் உங்கள் ராசி அதிபதி சூரியன், புதனோடு பயணம் செய்கிறார். முயற்சி ஸ்தானத்தில் கேது ஒன்பதாம் வீட்டில் ராகு, சுக்கிரன் ஏழாம் வீட்டில் சனி எட்டாம் வீட்டில் குரு, செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மறைமுக செல்வங்கள் சேரும். அதிக லாபங்கள் நிறைந்த மாதமாக உள்ளது. செவ்வாய் சூரியன் பயணம் மாத பிற்பகுதியில் சாதகமாக உள்ளது. மாத முற்பகுதி வரை வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் நிதானமாகவும் செல்வது அவசியம்.

வேலையில் உயர் பதவி
கம்பீரமாகவும் தைரியமாகவும் எதையும் எதிர்கொள்வீர்கள். வேலையில் உயர்பதவி கிடைக்கும். புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மிகச்சிறந்த கால கட்டம். உயர்வுகள் தேடி வரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வந்து போகும். பேசும் முன்பாக விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

நன்மைகள் நிறைந்த மாதம்
திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக பொருத்தம் பார்த்து முடிவு செய்வது நல்லது காரணம் களத்திர ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் நீங்கள் பேசும் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும். மூத்த சகோதரனால் நன்மைகள் உண்டாகும். நல்ல புகழும் வருமானமும் யோகங்களும் தேடி வரும். ராசி அதிபதியும் லாப அதிபதியும் ஒன்றாக இணைவதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு தேடி வரும்.

திருமண சுப காரியம் கைகூடி வரும்
மாத பிற்பகுதியில் செவ்வாய் ராகு உடன் இணையும் போதும் சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு பயணிக்கும் போதும் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணம் சுப காரியம் கை கூடி வரும். பண வரவு அதிகம் வந்தாலும் சுப விரைய செலவுகளும் வந்து போகும் எனவே பணம் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். விநாயகர் வழிபாடு பாதிப்புகளை நீக்கும். நிறைய நற்பலன்கள் அதிகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
-
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications