சின்னக்கண்ணன் அழைக்கிறான்.. மயிலிறகை தலையில் சூடிய கிருஷ்ணர்களின் அழகை நாள்தோறும் ரசிக்கலாம்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணனை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால்தான் நம்முடைய வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கிருஷ்ணர், ராதை வேடம் போட்டு அழகு பார்க்கிறோம். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாட்டங்கள் கோவில்களில் தொடங்கி உள்ள நிலையில் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் குட்டி கிருஷ்ணர்கள், ராதையை ரசித்து மகிழுங்கள்.

ருத்ரேஷ் குட்டி கிருஷ்ணன்
எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நான் யுகங்கள் தோறும் அவதரிப்பேன் என்று சொன்னவர் பகவான் கிருஷ்ணர். பகவான் கண்ணனின் அவதாரமே அதர்மத்தையும் அழிக்கவும் அசுரர்களை வதம் செய்வதற்காகவே நிகழ்ந்தது. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

S. Prakathi
கருவில் இருக்கும் போதே பல சோதனைகளை சந்தித்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனது குறும்புத்தனம் பலரையும் கவரும். கிருஷ்ணன் என்றாலே வசீகரமானவன் பக்தர்களை வசீகரிப்பவன். தலையில் மயிலிறகை சூடி நிற்பவன் கிருஷ்ணன்.

VV Sai Prasaadh
கண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா. ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர். ராதையை மனதில் சுமக்கும் கண்ணன், அவளை தலையில் வைத்து கொண்டாடும் விதமாகவே மயிலிறகை தலையில் சூடியுள்ளார் என்று பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே கூறியுள்ளார்.

Magizhini Balaji
கிருஷ்ணனின் பட்டத்து ராணி ருக்மணி. சத்யபாமா, ஜாம்பவதி காளிந்தி, மிராவிந்தா, சத்டயா, பத்ரா என ஆறு பேர் இருந்தாலும் ருக்மணியும் பாமாவும் மட்டும்தான் பலரால் அறியப்பட்டவர்கள்.

Krishnan முரசொலி
என்னதான் பாமா ருக்மணி கிருஷ்ணரின் பட்டத்து ராணிகளாக இருந்தாலும் கிருஷ்ணரின் மனம் கவர்ந்த ராதைதான் கண்ணனின் அருகில் இருக்கிறார். ராதா கிருஷ்ணன்தான் பலராலும் வணங்கப்படுகின்றனர். எனவேதான் சக்தியின் அம்சமான ராதைக்கு மதிப்பு தரும் வகையில் மயிலிறகை தலை மேல் வைத்து கொண்டாடுகிறாராம் பகவான் கண்ணன்.

B. RUTHRESH
கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். அப்போது கண்ணனின் லீலைகளை கதைகளாக சொல்ல வேண்டும். இதன்மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வி அறிவும் புத்திசாலித்தனமும் கூடும். கிருஷ்ண ஜெயந்தி வரும் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நம் வீட்டு குட்டிக்கண்ணன்களின் அழகை உலகறியச் செய்கிறது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம். கிருஷ்ணனின் படங்களை அனுப்புங்கள் என்று நாம் சொன்னதில் இருந்தே வரிசையாக கண்ணன், ராதைகள் நமது மெயிலுக்கு வரத் தொடங்கியுள்ளது. இன்று முதல் நீங்களும் மயிலிறகு சூடிய மன்னன் குட்டிக்கண்ணன்களின் அழகையும், ராதைகளின் அழகையும் கண்டு ரசியுங்கள்.

D. ஷர்வீண்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications