குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: அள்ளித்தரப்போகும் லாப குரு.. இடம் மாறும் சனியால் யாருக்கு ஜாக்பாட்
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்கள் கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரோதி குரு பெயர்ச்சி: சித்திரை மாதம் 18ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். கடக ராசிக்காரர்களுக்கு சித்திரை முதல் லாப குருவாக வந்து அமரப்போகிறார். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை 3,5,7ஆம் வீடுகளின் மீது விழப்போகிறது. உங்களுக்கு வரவேண்டிய பணம் தக்க நேரத்தில் வந்து சேரும். பழைய கடனை பைசல் செய்ய வழி கிடைக்கும்.

கவலைகள் காணாமல் போகும்: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இளைய சகோதரியின் தடைப்பட்ட திருமணம் சிறப்பாக முடியும். 11ஆம் வீட்டில் குரு பயணம் செய்வதால் மூத்த சகோதரர் உற்ற துணையாக இருப்பார். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் மூலம் பணம் வரும். வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும் உங்களின் செல்வாக்கு உயரும். கோடி கோடியாக செல்வம் குவியப்போகிறது.
குருவின் பார்வை: உங்கள் ராசிக்கு 3ஆம் வீடான தைரிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் உங்க தைரியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபம் கிடைக்கும். பிசினஸ் மூலம் நல்ல லாபம் வரும். குரு பகவான் களத்திர ஸ்தானத்தை பார்வையிடுவதால் கவலைகள் காணாமல் போகும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். திருமண சுப காரியம் கைகூடி வரும்.
பூர்வ புண்ணியத்தின் மீது குருவின் பார்வை படுவதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நீங்கள் விரும்பும் உயர்கல்வி தேடி வரும்.
ராகு கேது பயணம்: கடக ராசிக்காரர்களுக்கு ராகு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செல்வ வளம் பெருகும். சேமிப்பு கைகூடி வரும். தொட்டது துலங்கப்போகிறது. மிகப்பெரிய ராஜயோகத்தை தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. பண விவகாரங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வதால் பதவி அதிகாரம் தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கப்போகிறது. தடைகள் உடையப்போகிறது.
அஷ்டம சனி: எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக ஆட்சி பெற்று பயணம் செய்கிறார் சனி பகவான். ஆட்டி வைக்குமே என்று அச்சப்பட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். பண இழப்பு, பொருள் இழப்பு ஏற்படும். புதிய தொழில் எதுவும் இந்த கால கட்டத்தில் ஆரம்பிக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும்.
பாக்ய சனி: எந்த காரியம் செய்வதற்கு முன்பாகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கால்கள், எலும்புகளில் பிரச்சினை வரக்கூடும் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்துசெல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். குரோதி ஆண்டின் இறுதியில் சனி இடம்மாறி பாக்ய சனியாக பயணம் செய்யப்போகிறார் எனவே கஷ்டங்கள் படிப்படியாக நீங்கப்போகிறது. குரோதி ஆண்டில் மே மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு ராஜயோக காலமாக அமையப்போகிறது
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications