சனிக்கிழமை வரும் சந்திர கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிக்காரர்கள் யார்?
சென்னை: சனிக்கிழமை சந்திர கிரகணம் வருவதால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழும் நாளில் துலாம் ராசியில் 4 கிரகங்கள் கூடியுள்ளன. யாருக்கெல்லாம் பாதிப்பு வரப்போகிறது என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சந்திர கிரகணம்: மேஷ ராசியில் அக்டோபர் 28ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திரன் குரு ராகு கூட்டணி மேஷத்தில் சேர்ந்துள்ளது. ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழும் போது துலாம் ராசியில் செவ்வாய், கேது, புதன், சூரியன் கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த கிரகங்கள் சேர்க்கை, பார்வையால் குரு மங்கல யோகம், குரு சந்திர யோகம் உருவாகும் இந்த நாளில் கிரகண யோகமும் இணைகிறது. ராகு கேது பெயர்ச்சியோடு நிகழும் சந்திர கிரகணம் யாருக்கு சாதகம் என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியையும், குரு, ராகுவையம் பார்க்கிறார். குரு மங்கல யோகமும் குரு சந்திர யோகமும் தேடி வருகிறது. உங்களுடைய ராசியில் கிரகணம் நிகழ உள்ளதால் அந்த நாளில் உணவு விசயத்தில் கவனம் தேவை. இந்த நாளில் நீங்கள் உச்சரிக்கும் மந்திரம் உங்களுக்கு பல மடங்கு பலனை அளிக்கும். நினைத்த காரியம் நிறைவேற இந்த நாளில் குல தெய்வத்தை வணங்குங்கள் பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்: சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் நிகழ்கிறது நாளில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி உங்கள் ராசியில் இருப்பதால் சந்திர கிரகண நாளில் சந்திரன் காயத்ரி மந்திரம் கூறி பிரார்த்தனை செய்யலாம் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம்: சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நிகழப்போகிறது. பண வருமானம் அதிகரித்தாலும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். இந்த நாளில் குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கிரகண தோஷம் நீங்குவதற்கு கந்த சஷ்டி கவசம் படிக்கவும். காலையிலேயே குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நன்மையை ஏற்படுத்தும்.
கடகம்: சந்திர கிரகணம் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் நிகழப்போகிறது. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளதால் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். கிரகண தோஷம் உங்களுக்கு இல்லை என்றாலும் லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பண வரவு அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் வேலையில் கவனமும் நிதானமும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கிரகண நாளில் மன குழப்பம் நீங்க துர்க்கா அஷ்டோத்திரம் படிப்பது மன தைரியத்தை அதிகரிக்கும்.
சிம்மம்: சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் நிகழ்கிறது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைகின்றன. செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் பல வழிகளிலும் கொட்டும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சந்திர கிரகண நாளில் தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். குல தெய்வ வழிபாடு மன நிம்மதியை அதிகரிக்கும்.
கன்னி: சந்திரக கிரகணம் 8வது வீட்டில் நிகழ்கிறது. எட்டாம் வீட்டில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ள நாளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அஷ்டமத்தில் கிரகணம் நிகழும் நாளில் சந்திராஷ்டமும் உள்ளது. எனவே மிக முக்கியமான முடிவுகளை அன்றைய தினம் எடுக்க வேண்டாம். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் உஷ்ண கிரகணங்கள் இணைவதால் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும்.
துலாம்: ராசிக்கு நேர் எதிரே மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன சந்திர கிரகணம் ஏழாம் வீட்டில் நிகழப்போவதால் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன் மனைவி சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். கிரகண நாளில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. கிரகண நாளில் பூஜை அறையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் கிரகணம் நிகழப்போவதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் வீணாக செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்வது நல்லது. முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிக்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சந்திர கிரகணம் நிகழப்போவதால் கவனமும் நிதானமும் தேவை. எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். கிரகண நாளில் வெள்ளை நிற ஆடை அணிந்து முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மகரம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் மூன்று கிரகங்கள் இணைவதோடு கிரகணமும் நிகழப்போகிறது. வாகனங்களில் பராமரிப்பு செலவுகள் வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச் சின்ன கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.
கும்பம்: உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் 3 கிரகங்கள் இணைந்துள்ள போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. புது முயற்சிகளில் கவனம் தேவை. இந்த நாளில் புது வேலைக்காக முயற்சி செய்ய வேண்டாம். ஆன்மீக பயணம் செல்வது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கையில் இருக்கும் பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். சந்திர கிரகண நாளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.
மீனம்: இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். கிரகண நாளில் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். கிரகண நாளில் காலையிலேயே சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். அன்னாபிஷேகத்திற்கு பச்சரிசி வாங்கிக்கொடுப்பது நல்லது. துர்கா அஷ்டோத்திர பாராயணம் செய்வது மனதிற்கு அமைதியை தரும்.












Click it and Unblock the Notifications