சிம்மவாகனத்தில் மகரசங்கராந்தி பிரவேசம் - யாருக்கு பணவரவு, யாருக்கு ராஜவெகுமானம் கிடைக்கும்
காலதேவதை மகரசங்கராந்தியின் பிரவேசம் இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது.
சென்னை: ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சார்வரி வருடம் தை மாதம் 1ஆம் தேதி ஜனவரி 14, 2021ஆம் ஆண்டு வியாழக்கிழமை சுக்லபட்சம், பிரதமை திதி திருவோணம் நட்சத்திரம், வஜ்ரம் நாமயோகம் பவ கரணத்தில் காலை 8.15 மணிக்கு சூர்ய உதயாதி 4.00 நாழிகை அளவில் மகர லக்னம் சிம்ம நவாம்சையில் சங்கராந்தி பகவான் மகரம் ராசியில் பிரவேசிக்கிறார். மகரசங்கராந்தி தேவதையின் பெயர், தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதைக்கு ஒரு பெயர் உண்டு. 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த ஆண்டு தேவதையின் பெயர், வாகனம், உடை பற்றி பஞ்சாங்கத்தில் என்ன பலன் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மகரசங்கராந்தி பலன்கள்:
மகரசங்கராந்தி தேவதையின் பெயர்: மந்தாகினி - பிராமண பீடை,
வாகனம்: சிங்கம் - ராஜாக்களுக்கு மகாபயம் போர் பீதி
வஸ்திரம் : வெள்ளை - ராஜபீடை, சுபிக்ஷம்
ஆபரணம்: மாணிக்கம் - ராஜபீதி, பகுவிருஷ்டி
அபிஷேகம் : மஞ்சள் - ஸ்திரிகளுக்கு பீடை
ஆயுதம் : வீணை - திருடர்களுக்குப் பயம், சர்வநாசம்
கந்தம் : கஸ்தூரி - கணக்கர்களுக்கு பீடை, ஜன சௌக்கியம்
புஷ்பம் : புன்னைமாலை - ஜகத்சௌக்கியம், பஹுவிருஷ்டி
சத்திரம் (குடை) : தாமிரகுடை - தாமிர விலை ஏற்றம்
சாமரம் ( விசிறி) : தங்கம் - தங்கம் விலை ஏறும்
வாத்தியம்: ருத்ரவீணை - அரசபீடம்
பாத்திரம்: கபாலம் - விருஷ்டி, நாசம்
போஜனம்: அன்னம் -தானியங்களுக்கு பூச்சி அண்டுதல்
முகபலன் : புன்சிரிப்பு - தானிய விருத்தி
ஜாதி : வைசிய ஜாதி - வணிகர்களுக்கு பீதி
திக்கு: வடக்குதிசை - சகலருக்கும் பிரச்சினை
பட்சம் : சுக்லபட்சம் - சுபிட்சம்
வாரம் : வியாழன் - நல்ல மழை
காலம் : பிராதக் காலம் - துவிஜன நாசம்
லக்கினம் : சர லக்கினம் - தானிய விருத்தி
மகர லக்கினம் - நல்ல மழை உண்டு
பணவரவு யாருக்கு
உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய 3 நாட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் உண்டாகும்.
யோகம் யாருக்கு
கிருத்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும் திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும்.
ராஜ வெகுமானம் யாருக்கு
உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜகோபமும், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications