மார்கழி மாத ராசி பலன் 2020: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும்

மார்கழி மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வையால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் பிறந்து விட்டது. சூரியனின் பயணம் இந்த மாதத்தில் தனுசு ராசியில் உள்ளது. தனுசு குருபகவானின் வீடு. குருவின் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் ராகு, விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் தனுசு ராசியில் தொடங்கி தனுசு ராசியில் முடிகிறது. மார்கழி மாதத்தில் 16-12-2020 முதல் 13-01-2021 வரை சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் சில கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி 2ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் 9ஆம் தேதி மேஷ ராசிக்கு மாறுகிறார்.19ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 20ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மார்கழி மாதத்தில் முக்கிய விஷேசங்கள் உள்ளன. மார்கழி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, மார்கழி 15 ஆருத்ரா தரிசனம், 27ஆம் தேதி கூடாரவல்லி ஆண்டாள் தரிசனம் செய்ய திருமண தடைகள் நீங்கும். 28ஆம் தேதி அமாவாசை தினம் அனுமன் ஜெயந்தி ஆகிய திருவிழாக்கள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்க ராசி நாதன் சூரியன் இதுநாள் வரை கேது உடன் இணைந்து சஞ்சரித்தார் வேலைப்பளு கூடியது. மார்கழி மாதத்தில் சூரியன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளில் ஆரோக்கயித்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிகள் நிதானமாக இருங்கள். அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் நுண்கலைகளில் ஆர்வம் உண்டாகும். 20ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் கவனம் தேவை. செவ்வாய் கடந்த காலங்களில் எட்டாம் வீட்டில் இருந்தார் வீண் விரையம் ஏற்பட்டது. சில விபத்துக்களை சந்தித்தீர்கள். இந்த மாதத்தில் செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் சொத்து விவகாரங்கள் சுமூகமாக முடியும். வீடு மாற்றம் பற்றி யோசிக்கலாம். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலாம் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பெரிய பதவியில் இருப்பவர்களின் உதவியும் ஆதரவும் கூடும். வேலையில் இருந்த சிக்கல்கள் கூடும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 19ஆம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கோவிலுக்கு சென்று கோதுமை தானம் கொடுங்கள். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. குலதெய்வ வழிபாடு குடும்பத்தை காக்கும். சனிக்கிழமை நெய்தீபம் ஏற்றுங்கள் பாதிப்புகள் குறையும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுப செலவுகள் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் பேசுவார்கள். யோகாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு சாதகமாக இருக்கும். செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டில் மறைகிறார். கோபம் கட்டுப்படும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் நன்றாகப் படிப்பீர்கள், 20ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், 19ஆம் தேதிக்குப் பின்னர் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், பண விவகாரங்களில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை. மின்சாரத்தை கையாளும் போது கவனம் தேவை. குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். சூரியன் பார்வையால் வேலை செய்யும் இடத்தில் உங்களின் கை ஓங்கும். வெற்றிகள் அதிகரிக்கும். இந்த மாதம் கோவிலில் துவரம்பருப்பு தானம் கொடுங்கள். விநாயகரை வணங்குங்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே சூரியன் மூன்றாம் வீட்டில் மறைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்யலாம். பண வரவு அதிகரிக்கும். தொழில் செய்ய வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு வெற்றி தேடி வரும். உங்க ராசி நாதன் சுக்கிரன் சாதகமாக பயணம் செய்வதால் தைரியம் தன்னம்பிக்கை கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்திருந்த தகவல் வந்தடையும். தகவல் தொடர்பு சிறப்படையும், 20ஆம் தேதிக்கு பிறகு கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். புதன் சாதகமாக இருப்பதால் தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள், 17ஆம் தேதிக்குப் பின்னர் வீடு மாறும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இயந்திரத் தொழில் சிறப்படையும். செவ்வாய் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டில் அமர்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சகோதரர்களிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண விசயமாக பேசலாம். சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். வேர்க்கடலை தானமாக தரலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும் இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். தள்ளிப்போன தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செவ்வாய் பெயர்ச்சி அடைந்து ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் வெற்றிகள் தேடி வரும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 20ஆம் தேதிக்குப் பின்னர் எதிர்பார்த்த தகவல் வரும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 19ஆம் தேதிக்குப் பிறகு பொன்நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வேலைச்சுமை அதிகாரிக்கும் என்றாலும் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+