மே மாத ராசி பலன் 2023: மகிழ்ச்சியும் மன நிம்மதியும்..எந்த ராசிக்காரர்களின் வீடு தேடி வரும்?
சென்னை:
மே மாதத்தில் நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மேஷம், ரிஷபம் ராசிகளில் பயணம் செய்கிறார். புதன் மேஷ ராசியில் குரு, ராகு உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கள யோகம் கைகூடி வரப்போகிறது. மே மாதத்தில் தனுசு மற்றும் மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே 15ஆம் சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே மாத இறுதியில் சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கும்ப ராசியில் சனி, துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களுக்கு அற்புதமான கால கட்டம். கஷ்டங்கள் கவலைகள் நீங்கி நல்ல நேரம் பிறந்து விட்டது. குரு பகவானின் பார்வை உங்களுக்கு பொன்னான கால கட்டத்தை கொண்டு வரப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். வாழ்க்கையில் மாற்றங்கள் வரப்போகிறது. புதிய முயற்சிகள் வெற்றிகளை கொண்டு வரப்போகிறது. படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரப்போகிறது. உங்களை விட்டு பிரிந்தவர்கள் தேடி வருவார்கள். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கப்போகிறது.

குரு பார்வை: குரு பகவானின் பார்வையால் திருமணம் கைகூடி வரப்போகிறது. தொட்டது துலங்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.உங்களுக்கு விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இந்த மாதம் பொருளாதார வளம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதமாக அமைந்துள்ளது. ஏழரை சனியில் பாத சனி காலம் என்பதால் கவனம் தேவை. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு லாபம் வரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

கவனம் தேவை: சந்திராஷ்டம காலத்தில் கவனம் தேவை. செவ்வாய் பகவானின் நேரடி பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையேயான பேச்சில் கவனம் தேவை. காதல் மலரும் காலம். கல்யாணம் முடிவாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவைப்படும். யாரை நம்பியும் பணத்தை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். பெண்கள் உடல்ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சுபகாரியங்கள் கைகூடி வரப்போகிறது. மாற்றங்களும் முன்னேற்றங்களும் மன மகிழ்ச்சி நிறைந்த மாதமாக மே மாதம் அமைந்துள்ளது. பேசும் போது பொறுமையும் நிதானமும் தேவை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications