மே மாத ராசிபலன்கள் 2019: மிதுனம் ராசிக்காரர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்
Recommended Video
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளதால் இது சந்தோஷமான மாதமாக உள்ளது.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

புதனால் நன்மை
ராசி நாதன் புதன் மீனத்தில் சுக்கிரன் உடன் இணைந்து நீசபங்க அமைப்பில் இருக்கிறார். விருச்சிகத்தில் இருந்து குருவின் பார்வை உங்கள் ராசி நாதன் மீது விழுவது ராஜயோகம் அமைப்பாகும். இதனால் நன்மைகள் அதிகம் நடைபெறும். மாத ஆரம்பத்தில் பத்தாம் வீட்டில் உள்ள புதன் பின்னர் மே 4ஆம் தேதி சூரியனுடன் 11ஆம் வீட்டில் இணைகிறார். மாத இறுதியில் ராசிக்கு 12ஆம் வீடான ரிஷபத்தில் சஞ்சரிப்பதும் நன்மை தரக்கூடியது.

புதிய வேலை வாய்ப்பு
லாப வீடான மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளது நன்மை தரக்கூடியது. பெயர் புகழை கொடுக்கும். உச்சம் பெற்றுள்ள சுக்கிரன் 11ஆம் தேதி 11ஆம் வீட்டில் சூரியனுடன் இணைவதால் வெற்றி நடை போடுவீர்கள். இதுநாள் வரை திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறையோடு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கும்.

கல்வியில் முன்னேற்றம்
சனி ஏழாம் வீட்டில் இருந்தாலும் சுப கோள்களின் சுபமான சஞ்சாரம் நன்மை தரக்கூடியது. செவ்வாய் மிதுனத்தில் ராகு உடன் இணைந்து பரிவர்த்தனை யோகத்தை தருகிறார். குரு ஆறாம் வீட்டில் இருந்தாலும் கண்ட சனி காலம் என்றாலும் மாணவர்களுக்கு நன்மை தரும் மாதம் வெளிநாட்டில் படிக்க முயற்சி செய்யலாம். மருத்துவ கல்விக்கு முயற்சி செய்யலாம். புதன் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு நன்மை அதிகம் நடைபெறும்.

யோசித்து செயல்படுங்கள்
மாதம் முழுவதும் நன்மைகள் நிறைந்த மாதம். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். என்னதான் கிரகங்களின் சஞ்சாரம் நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் ராசியில் ராகு செவ்வாய் சேர்க்கை ஏழாம் வீட்டில் இருக்கும் சனி கேதுவின் நேரடி பார்வை சில தடங்களை ஏற்படுத்தும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். யாருடனும் அதிக வாக்குவாதம் செய்ய வேண்டாம். அதே போல நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications