புதன் பெயர்ச்சி: மேஷத்தில் குடியேறும் புதன்... 12 ராசிக்கும் பலன்கள் பரிகாரங்கள்

மீனம் ராசியில் நீசமடைந்திருந்த புதன் இன்று முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்பு கிரகம் சூரியனுடன் குடியேறப்போகிறார். 12 ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்விக்கு அதிபதியான புதன் தனது நீச்சம் பெற்ற நிலையில் இருந்து விடுபட்டு மேஷம் ராசியில் இன்று முதல் குடியேறப்போகிறார். சில வாரங்கள் மேஷம் ராசியில் சஞ்சாரம் செய்யும் புதன், தொடர்ந்து ரிஷபம் ராசிக்கு இடம் மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன். இது அலி கிரகம். பச்சை நிறம் கொண்டவர். மகா விஷ்ணுவின் அம்சம். மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது.

கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.

மேஷம்

மேஷம்

வீரத்தின் நாயகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. மேஷத்திற்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். இன்று முதல் உங்கள் ராசியில் புதன் குடியேறுகிறார். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் இன்று முதல் 12வது வீட்டில் அமர்கிறார். விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். புதன்கிழமையன்று பச்சை நிற ஆடை அணியலாம். பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசி அதிபதியும் 4வது வீட்டதிபதியுமான புதன் இன்று முதல் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும்.புதன் 11ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பெருமாள் கோவில்களில் அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித் தரலாம்.

கடகம்

கடகம்

புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடியது. சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்கள் நன்மைகளை பெறுவதற்குாிய கால கட்டமாக இரு இருக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவாா்கள். வேலை செய்யும் இடத்தில் நெருக்கடியும் பணிச்சுமையும் அதிகாிக்கிறது. பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள்

பரிகாரம்: ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். மாணவர்களுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடக்க புதன்கிழமைகளில் ஹயக்ரீவரை வணங்கலாம். பசுவிற்க அகத்திக்கீரை தானமாக தரலாம்.

கன்னி

கன்னி

உங்கள் ராசி அதிபதியும் 10ஆம் அதிபதியுமான புதன் உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் அமர்கிறார். பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை விட்டு வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு இவைகளை பெறுவீா்கள். நரம்பு பிரச்சினைகள் ஏற்படும். இதனை தவிர்க்க சகோதரிகளுக்கு பரிசுகளை வாங்கி தரலாம்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் மருத்துவமனைக்கு சென்று படுக்க வேண்டியிருக்கும். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். உத்யோகத்தில் கடன் கேட்டிருந்தவா்களுக்கு கிடைக்கும். வீட்டில் தம்பதியா் ஒருவருக்கொருவா் வாக்குவாதம் செய்து சின்னச்சின்ன சண்டை வரும். சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். கூடவே புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டிய காலம் இதுவாகும். வீட்டில் தம்பதியாிடையே உற்சாகம் இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். பண வருவாய் இருக்கும். சின்னச்சின்ன தடைகள் ஏற்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கித் தரலாம் நன்மை நடக்கும்.

மகரம்

மகரம்

ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். பசுவிற்கு கோதுமை கொடுக்கலாம்.

கும்பம்

கும்பம்

புதன் 3வது இடத்தில் அமர்கிறார். துலாம் ராசிக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். அதே நேரத்தில் இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு சின்னச் சின்ன பிரச்னை ஏற்படும். கடன் தொல்லை அதிகாிக்கும். பண வருவாய் பஞ்சமிருக்காது. கூடவே செலவுகளும் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே... இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த புதன் இன்று முதல் ராசிக்கு2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியா் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+