சனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும்

சனிபெயர்ச்சி 2020 ஜனவரி மாதம் நிகழ உள்ளது. சனி பகவான் தொழில் காரகன் இந்த சனிப் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் தொழிலில் லாபம் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். இந்த சஞ்சாரம் பார்வையால் யாருக்கு தொழில் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

சனிபகவான் ஜனவரி முதல் விருச்சிக ராசிக்காரர்களை விட்டு விலகுகிறார். கும்ப ராசிக்காரர்களை விரைய சனியாக தொடப்போகிறார். ரிஷப ராசிக்கு அஷ்டம சனி விலகுகிறது. கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. மிதுன ராசிக்கு கண்டச்சனி விலகி அஷ்டம சனி தொடங்குகிறது. அதே நேரம் கடக ராசிக்கு கண்டச்சனி தொடங்குகிறது. துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. மேஷம், சிம்மம் வீடு நிலம் வாங்கலாம். தொழில் தேக்கம் அகலும், விருச்சிகம் தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். மீனம் லாப ஸ்தான அதிபதி சனி பெயர்ச்சியால் யோகம் வரும். சனிபகவானால் தனலாபம், தொழில் வளர்ச்சி யாருக்கு பலன்இந்த சஞ்சாரம் தொழில் வருமானத்தில் என்ன லாபத்தை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.

வீடு நிலம் வாங்கலாம்

வீடு நிலம் வாங்கலாம்

இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம் பலமடையும். காரணம் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். தன யோகம் அதிகம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் கடன்கள் அதிகம் ஏற்பட்டது. தடை தாமதங்கள் அதிகம் இருந்தது. இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும். சுப யோகர் சனி. காரணம் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி வருவது நன்மையான பலன்களைத் தரும்.

அஷ்டமத்து சனி

அஷ்டமத்து சனி

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி எப்பவுமே தீமை செய்ய மாட்டார். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் நல்ல பலன்களே கிடைக்கும். புதிய தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி என்று பயப்பட வேண்டாம். பெரிய கெடுபலன்கள் வராது. பாக்யாதிபதியும் அவர்தான் என்பதால் ரொம்ப கெடுதல் செய்ய மாட்டார் கொடுத்து கெடுப்பார். தொழிலில் லாபம் வரும். முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும்.

பிள்ளைகளால் யோகம்

பிள்ளைகளால் யோகம்

கடகம் ராசிக்காரர்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் கண்டச்சனியால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும் தொழில் பார்ட்னர் குடும்ப பார்ட்டனர் விட்டுக்கொடுத்து போகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் சண்டை வரும் அப்புறம் சங்கடம்தான். கன்னி ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நன்மைகளே நடைபெறும். பிள்ளைகளால் யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடங்கும் தொழிலில் நன்மைகள் நடைபெறும்.

தைரியம் கூடும்

தைரியம் கூடும்

துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நல்ல பலன்களையே தருவார் வீடு நிலம் வாங்கலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியோட தாக்கம் அதிகம் இருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காது. உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது இனி சிக்கல்கள் தீரும். காரணம் சனி மூன்றாம் வீட்டுக்கு மாறுவதால் தைரியம் கூடும். தொழிலில் லாபம் வரும் வீடு நிலம் வாங்கலாம்.

யோகம் தரும் சனி

யோகம் தரும் சனி

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் நா காக்க. காரணம் சனியின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும். எதையும் அவசரப்பட்டு பேசி தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி. சொந்த வீட்லயே அமரும் சனி யோகத்தை கொடுப்பார். ராசி அதிபதி ராசியில் அமர்வதால் யோகத்தை கொடுப்பார். 2025 வரை ஏழரை சனி இருப்பதால் தொழில் ரீதியான மாற்றங்கள் மெதுவாக அமையும்.

தொழில் லாபம்

தொழில் லாபம்

கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சனி அமர்கிறார். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபத்தை தரும். பொருளாதாரம் சரளமாக வரும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். சிக்கமான இருந்தால் நன்றாக பணம் சேமிக்கலாம். மீன ராசிக்கு லாப ஸ்தானதாதிபதி லாப ஸ்தானத்திலேயே வருவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கிடைப்பதோடு அதிகமாக சாதகமான சம்பவங்களை நடைபெறும்.

பலன் தரும் பரிகாரங்கள்

பலன் தரும் பரிகாரங்கள்

சனி பகவானால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய விநாயகர் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம் செய்யுங்க. அன்னதானம் பண்ணுங்க. சனிபகவானுக்கு ரொம்ப பிடிக்கும். சனிக்கிழமை ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களிலும். சனியின் நட்சத்திரமான

பூசம், அனுசம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும் தயிர்சாதம், வெண் பொங்கல் தானம் கொடுக்கலாம். அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவும். சனிபகவானால் ஏற்படும் வீரியம் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+