Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிதுன ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த ஆண்டு

பிலவ தமிழ் வருடப்பிறப்பு மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிதுன ராசிக்காரர்களுக்கு பிலவ வருடத்தில் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கப் போகிறது. கவலைகளும் கஷ்டங்களும் தீரப்போகிறது. மங்களகரமான பிலவ தமிழ் புது வருடம் சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் சூரியன், சுக்கிரன், சந்திரன் கூடியுள்ளன. ராசிக்கு 9ஆம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். ஆறாம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். ஆண்டு முழுவதும் கிரகங்களின் பயணம் உங்கள் ராசிக்கு சாதகமாகவே உள்ளது.

மிதுன ராசிக்காரர்கள் கடந்த காலங்களில் அஷ்டம சனி, அஷ்டம குரு என அசந்து போயிருப்பீர்கள், வாழ்க்கையை கசக்கி பிழிந்து எடுத்திருக்கும். ஜென்ம ராகு பாடாய் படுத்தி எடுத்தது கூடவே அஷ்டம சனியினால் நிம்மதியின்றி தவித்தீர்கள். குடும்ப பிரச்சினை வேலையில் சிக்கல் என தவிக்க வைத்து வைத்து விட்டது. அஷ்டம குரு ஜென்ம ராகு விலகி விட்டது கவலை நீங்கி விட்டது.

மன நிம்மதி

மன நிம்மதி


மிதுன ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் ஆண்டின் துவக்கத்தில் சாதகமாக உள்ளது. லாப ஸ்தானத்தில் உச்ச சூரியன், கூடவே சுக்கிரன் என பயணம் செய்வதால் குடும்பத்தில் அமைதி சந்தோஷம் உண்டாகும். விலகிய சொந்தங்கள் உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். எட்டாம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரித்தாலும் நிறைய மன உளைச்சல்களை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம குருவும் தடைகளை ஏற்படுத்தி வந்தது. குரு ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி விட்டது. இதுநாள்வரை பட்ட கஷ்டங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் இந்த பிலவ ஆண்டில் ஏற்படும்.

புத்திரபாக்கியம்

புத்திரபாக்கியம்

ஒன்பதாம் வீட்டில் உள்ள பாக்ய குரு பார்வை வருட ஆரம்பித்திலேயே கிடைக்கிறது. வீடு கட்ட ஆரம்பிக்கலாம். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு கிடைக்கும் குருவின் பார்வையால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

கணவன் மனைவி பிரச்சினை

கணவன் மனைவி பிரச்சினை

சத்ரு தொல்லைகள் வரும். பண வரவு வந்தாலும் வரவுக்கு ஏற்ற செலவுகளை வைத்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் கடன் பிரச்சினையில் தள்ளிவிடும். திருமணமான வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே சில சோதனைகள் கருத்து வேறுபாடுகள் வரலாம்.எனவே பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மாற்றுபாலின நட்புக்களிடம் கவனமாக இருக்கவும். புதிதாக வரும் யாரையும் நம்ப வேண்டாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை விட்டுக்கொடுத்து செல்லவும்

கடன் தர வேண்டாம்

கடன் தர வேண்டாம்

ஆயுள்காரகன் ஆயுஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் ஆயுள் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. யாரை நம்பியும் பெரிய அளவில் கடன் கொடுக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கொடுக்க வேண்டாம். தொழிலில் பெரிய அளவில் முதலீடுகள் தேவையில்லை. புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம் நஷ்டத்தை சந்திப்பீர்கள்.

வேலையில் புரமோசன்

வேலையில் புரமோசன்

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். நிறைய பாக்கியங்கள் தேடி வரும். வெளியூர், வெளிநாடு யோகம் கை கூடி வந்துள்ளது. இந்த பிலவ வருடம் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது.

முருகனுக்கு விரதம்

முருகனுக்கு விரதம்

குரு மீண்டும் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்லும் காலமான செப்டம்பர் 13 முதல் நவம்பர் 16 கவனம் தேவை. வீண் பழி வரலாம். எதிர்பாலினத்தவர்களிடம் கவனம் தேவை. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கோவிலுக்கு வணங்கவும். கார்த்திகை நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வரவும் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வலிகள் வேதனைகள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+