ஆண்களுக்கு வசதியான வாழ்க்கை வசீகரிக்கும் சக்தி - எங்க மச்சம் இருந்த என்ன பலன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாமுத்திரிகா லட்சணப்படி மச்சம் ஒரு ஆணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் பலன்களை தருகிறது.

அதிர்ஷ்டக்கார ஆணைப்பார்த்து அவனுக்கென்ன மச்சக்காரன் என்பார்கள். மச்சம் ஆண், பெண்ணின் அதிர்ஷ்டம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆண்களின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்கிறது மச்ச சாஸ்திரம். எங்கு மச்சம் இருந்தால் என்னமாதிரியான அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளனர்.

மச்சம் ஏற்படுவதற்கும் கிரகங்கள்தான் காரணமாக இருக்கின்றன. ராகு கேது கிரகங்களும், ரத்தத்திற்கு காரகரான செவ்வாயும் மச்சத்திற்கு காரணமாகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக ராகு கேது தொடர்பு பெற்று சனி பார்வை பெற்றால் மச்சம் அதிகம் இருக்கும் என ஜோதிட அலங்காரம் சொல்கிறது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பார்களாம்.

ஆண்களின் இடது மார்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார். வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண் குழந்தைகள் பிறக்கும் என மச்ச சாஸ்திரம் சொல்கிறது. அந்தரங்க உறுப்புகளில் மச்சம் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அந்த மாதிரி இடத்திற்கு செல்வார்கள் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

மச்சத்தினால் அதிர்ஷ்டம்

மச்சத்தினால் அதிர்ஷ்டம்

சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

அதிர்ஷ்டமான மனைவி

அதிர்ஷ்டமான மனைவி

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவாராம். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

கண்களில் மச்சம்

கண்களில் மச்சம்

இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார். இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

கர்வக்காரன்

கர்வக்காரன்

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள். மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

 காதல் நாயகன்

காதல் நாயகன்

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள். மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும். மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக்காரர்

அதிர்ஷ்டக்காரர்

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம், இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவருக்கு எளிதாக கிடைக்கும்.

பணக்காரர்

பணக்காரர்

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும். மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

உழைப்பாளி

உழைப்பாளி


வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான். தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான். முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+