தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் - சுக்கிரன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது தென்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது.

புராணச் சிறப்பு:
திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். சிவந்த நிறம் கொண்ட தம்மைவிட பூதேவியிடம் அதிக அன்பு கொண்டவராக திருமால் இருப்பதைக் கண்ட திருமகள் துர்வாச முனிவரிடம் சென்று பூதேவியின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனியாக மாற்றுமாறு வேண்டிக்கொண்டார்.
துர்வாச முனிவர் திருமாலைக் காண செல்கிறார். திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூதேவி துர்வாசரின் வருகையை கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூதேவி கரிய நிறம் நீங்கி சிவந்த நிறம் அடையுமாறு சபித்தார். பூதேவியும் குற்றத்தை பொருத்தருள வேண்டி சாபவிமோசனம் வேண்டினார்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்ற இடத்திற்க்கு சென்று திருப்பேரை எனும் பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்டும் கரிய நிறம் அடையலாம் என்று துர்வாச முனிவர் கூறினார். பூதேவியும் தங்கத் திருப்பேரை எனும் நாமத்துடன் இவ்வூரில் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் தவமியற்றி வந்தார்.
பங்குனி உத்திரத் திருநாளன்று நதியில் நீராடிய பூதேவியின் கரங்களில் மீன் வடிவக் குண்டலங்கள் கிடைத்தது. அவற்றை கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தார். திருமால் மகிழ்ந்து பூதேவியின் கரிய நிறத்தை மீண்டும் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
எம்பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்கப்பட்டார். இத்திருத்தலம் தென் திருப்பேரை என அழைக்கப்பட்டு வருகிறது.
இலக்கியச் சிறப்பு:
நம்மாழ்வார் இத்திருப்பதி மீது பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார்.
தனிச் சிறப்பு:
இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது.
கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது. வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், சிறு பிள்ளைகள் விளையாடும் ஒலிகளையும் பெருமாள் தினமும் கேட்க விரும்பியதால் கருடன் சற்று விலகி அமைந்துள்ளதாக தலபுராணம் கூறுகிறது.
அமைவிடம்:
திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன் : மகர நெடுங்குழைநாதர், நிகரில் முகில்வண்ணன்
இறைவியர்: திருப்பேரை நாச்சியார், குழைக்காது நாச்சியார்
தீர்த்தம் : கூடுபுனல் தீர்த்தம்(ஸகந்த தீர்த்ட்தம்) சுக்ர புஷ்கரணி
தல விருட்சம் : வில்வ மரம்
ஆகமம் : பாஞ்சராத்திர ஆகமம்
விமானம் : பத்ர விமானம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications