Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு 274 இடங்கள் கிடைக்கும்- ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் அவர் தெரிவித்துள்ள

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்று கிராமத்து டீக்கடைகள் முதல் ஸ்டார் ஹோட்டல் பார்கள் வரை பரபரப்பாக பேசப்படும் நிலையில் எக்ஸிட் போல் சர்வே முடிவுகள் எல்லாமே ஆளும் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஜோதிடர்களின் கருத்தும் மோடிக்கு ஆதரவாகவே உள்ளது. சேலம் ஜோதிடர் பாலாஜிஹாசன் லோக்சபா தேர்தல் கணிப்புகளை வெளியிடுவதற்காக பல மாதங்கள் உழைத்துள்ளார். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களைப் பெற்றாலும் புதிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்து மீண்டும் மோடி பிரதமராவார் என்று கணித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாவே தேர்தல் ஜூரம் அரசியல்வாதிகளை பிடித்து விட்டது. நாட்டின் அரியணையை கைப்பற்றப்போவது பாஜகவா? காங்கிரஸ் கட்சியா? அடுத்த பிரதமர் மோடியா? ராகுல்காந்தியா என ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் ஒரு பக்கம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வை ஆகியவைகளை வைத்து லோக்சபா தேர்தலில் வெல்லப்போவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? பாஜக தலைமையிலான கூட்டணியா என்று ஜோதிடர்களும் தங்கள் பங்குக்கு கணித்து கூறி வருகின்றனர்.

16வது லோக்சபாவிற்கான பதவிக்காலம் வருகிற 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. 17வது லோக்சபாவிற்காக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவும் 7 கட்டமாக நடந்து முடிந்து விட்டது. வியாழக்கிழமை டி டே எனப்படும் முடிவு தெரியும் நாளாகும். அதற்கு முன்னதாக பல ஊடகங்களிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பலரின் தூக்கத்தைக் கெடுத்து விட்டது.

தொங்கு நாடாளுமன்றம்

தொங்கு நாடாளுமன்றம்

ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் வேண்டும், ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் லோக்சபா தேர்தலில் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்று கணித்துள்ளார். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று கூறியுள்ளார்.

பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள்

பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள்

மிகப்பெரிய கட்சியாக பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். பாஜக கூட்டணிக்கட்சி 274 இடங்களைப் பிடிக்கும் என்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் மோடி பிரதமராவார் என்றும் கணித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை

காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணில்தான் இடங்கள் கிடைக்கும் என்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 138 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளார்.

மாநில கட்சிகளுக்கு 136 இடம்

மாநில கட்சிகளுக்கு 136 இடம்

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேராமல் போட்டியிட்ட மாநில கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது இந்த கட்சிகள் 136 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என்றும் பாலாஜிஹாசன் கணித்துள்ளார்.

திமுக + அதிமுக

திமுக + அதிமுக

தமிழகத்தில் திமுகவிற்கு 24 இடங்களும் அதிமுகவிற்கு 14 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்திருக்கிறார். அதிமுகவில் இம்முறை சில எம்பிக்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார் பாலாஜிஹாசன்.

மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை

மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை

காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சிக்கோ, மாயாவதி, மம்தா பானர்ஜி போன்ற மாநில கட்சித்தலைவர்களோ பிரதமராக வாய்ப்பு இல்லை என்றும் பாலாஜிஹாசன் கணித்துள்ளார். இந்த கணிப்புகளை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+