Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017- சிம்மம்

புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். சிம்மம் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்ம ராசிக்காரர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது இதுவரை இருந்து வந்த கஷ்டநஷ்டத்தை நீக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் பண வரவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதி நிலவும் செப்டம்பர் மாதம் நிகழ உள்ள குருவின் ராசி மாற்றமானது வீடு மாறும் நிலையைக் கொடுக்கும்.

New year Rasi palan 2017 - Simmam

ஜனவரி - கவனம் தேவை

ஆண்டின் துவக்கத்தில் ஐந்தாமிடத்தில் இருக்கும் சூரியன் அனைத்திலும் வெற்றியைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு சூரியன் வருகிறார் உத்தியோகத்தில் தொல்லைகள் உண்டாகும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் விபத்துகளுக்கு வாய்ப்புகள் உள்லது புதன் இம்மாதம் முழுவதும் ஐந்தாம் இடத்தில் இருப்பது கமிஷன் வியாபாரத்தில் லாபத்தைக் கொடுக்கும். குரு இரண்டாம் இடத்திலிருப்பது செல்வச் சேர்க்கையைக் கொடுக்கும் சுக்கிரன் ஏழாமிடத்திலிருப்பது கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி வருட ஆரம்பத்தில் நான்காமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடையை நீக்கும் ராகு ஜென்ம ராசியில் இருப்பது மன சலனத்தை கொடுக்கும் கேது ஏழாமிடத்திலிருப்பது அனைவரிடமும் சரளமான உறவு நிலை வைத்துக்கொள்வது சிறப்பு.

பிப்ரவரி - ஷேர் மார்க்கெட்டில் லாபம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பாக பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும் புதன் இம்மாதம்03ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் சிக்கலை உண்டாக்கும் 22ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - பரம்பரை சொத்துக்கள்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அரசு அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் செவ்வாய் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் 11ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் கருத்து வேறுபாட்டைத் தரும் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகத்தைக் கொடுக்கும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - தொழில் சிறப்பு

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் பரம்பரையாகச் செய்து வந்த தொழில் சிறப்படையும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் போன்ற வகை தொழில்கள் சிறப்படையும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - உத்தியோகத்தில் மேன்மை

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - பண வரவு அதிகரிப்பு

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் சம்பளம் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும் 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - வீண் செலவுகள்

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம் வீண் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி பதினொன்றாமிடத்திர்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பன்னிரெண்டாம் இடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் 21ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - தேவையற்ற செலவுகள்

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகார குணம் உண்டாகும் சுக்கிரன் 21ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவியால் செலவுகள் அதிகரிக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் கேது 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அனைவரிடமும் பிரச்சினை உண்டாகும் இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - வசீகரம் அதிகரிக்கும்

சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பணவரவு அதிகரிக்கும் செவ்வாய் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் புதன் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு 12ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்கி அதில் குடிபுகும் யோகம் உண்டாகும் சுக்கிரன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - குடும்பத்தில் சந்தோஷம்

சூரியன் 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் பணியிடமாற்றம் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் புதன் 30ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் சுக்கிரன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - உல்லாச பயணம்

சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் புதன் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் 24ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் சுக்கிரன் 03ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - கலைகளில் ஆர்வம்

சூரியன் 16ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலை சம்பத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் சுக்கிரன் 20ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+