2024 புத்தாண்டு ராசி பலன்.. உல்லாச உலகம் எனக்கே சொந்தம்.. குஷியாகும் ராசிக்காரர்கள்
சென்னை: 2024ஆம் புத்தாண்டில் சில ராசிக்காரர்களுக்கு ரொம்பவே குஷியாக இருக்கப்போகிறது. உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என்று பாடப்போகிறார். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்குமா என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு 2024ஆம் ஆண்டில் குரு பகவான் பார்வை முதல் 4 மாதங்களுக்கு கிடைப்பதால் ஜனவரி முதல் மார்ச் வரை உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகமாக இருக்கும். உங்களின் உற்சாகமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு வாயு கோளாறுகளினால் உங்களுக்கு மூட்டுவலி, அஜீரணம் தலைவலி என சின்னச் சின்ன பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் கவனக்குறைவாக இருக்காதீர்கள் தேவையான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளுங்கள். காரமான உணவுகளையும், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள் அதுவே உங்களின் ஆரோக்கியத்தை அதிகமாக்கும். வேலை பளு காரணமாக மன அழுத்தமே உங்களுக்கு வரும் நோய்களுக்கு காரணமாக இருப்பதால் நீங்க மன அழுத்தம் போக்க தியானம், யோகா என மன அமைதியை ஏற்படுத்துங்கள். வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் பாதிப்புகள் குறையும்.

விருச்சிகம்: 2024ஆம் ஆண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குஷியான ஆண்டாக இருக்கப்போகிறது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். குரு பகவானின் பார்வையால் உங்களின் ஆற்றல் சக்தி அதிகமாகும். வருட மத்தியில் சில மன அழுத்தங்கள் ஏற்படலாம். அல்சர் பிரச்சினைகள் ஏற்படும். காரமான உணவுகளையும் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் நீங்கள் தவிர்த்து விடுங்கள். சின்ன சின்ன நோய் பாதிப்புகளை உடனடியாக கவனியுங்கள். சனியும் குருவும் சங்கடங்களை நீக்கி சந்தோஷத்தை அதிகரிக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்க சந்தோஷமாக இருக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.
தனுசு: 2024ஆம் ஆண்டு முழுக்க நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க காரணம் குரு உங்க ராசி நாதன் உங்களை பார்வையிடுவதுதான். ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபட்டிருக்கிறீர்கள் அதுவே உங்களுக்கு பெரிய ரிலீஃப். தலைமேல் இருந்த பாரம் இறங்கியது போல இருக்கும். ஆண்டின் மத்தியில் வேலையில் இருக்கும் பளுவினால் சில நேரங்களில் பதற்றமாகவும் அதனால் மன அழுத்தமாகவும் உணர்வீர்கள். இதனால் கோபமும் வரும். உங்களுடைய ஆற்றல் சக்தியை சேமியுங்கள் அப்போதுதான் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்க முடியும். நேர்மறையான எண்ணங்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். வேலை வேலை என்று அலையும் உங்களுக்கு ஓய்வு அவசியம் இல்லாவிட்டால் ஆண்டின் இறுதியில் நரம்பு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மையே நடைபெறும்.

மகரம்: சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமாக இருக்கும். உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதிக வேலை உங்களை சோர்வை ஏற்படுத்தும். வேலை விசயத்தில் சோம்பேறியாக இருக்காதீங்க அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பாத சனிபகவான் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்களைத் தருவார். குருவின் பார்வையால் உங்களின் உடம்பிற்குள் மறைந்திருந்த நோய்கள் வெளிப்பட்டு பின்னர் குணமாகும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நெகட்டிவ் எண்ணங்கள் விலகி பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என்று குஷியாக பாடப்போகிறீர்கள்.

கும்பம்: சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டு நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சனி உங்களுக்கு ஜென்ம சனியாக பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். சரியான நேரத்தில் சரியாக சாப்பிடுங்கள். வேலைப்பளுவினால் உறக்கமின்மை, கண் கோளாறுகள் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டின் மீது விழுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும் அச்சம் வேண்டாம். வாட்டி வதைத்த சளி தொந்தரவுகள் நீங்கும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம் தவிர்த்து விடுங்கள். வறுத்த கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். மன அழுத்தத்தை தவிர்த்து விடுங்கள். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். கண் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைகிறது. உங்களின் பிரச்சினைகள் மறைந்து விடும் மன அழுத்தமும் குறையும். கடந்த காலத்தில் பெரிய நோய்கள் இருப்பது போல சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தீர்கள். குரு பகவான் பார்வையால் நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. தலைமேல் ராகு பயணம் செய்வதால் ஏதோ நோய் இருப்பது போலவே உணர்வீர்கள். வேலைச்சுமை, ஓய்வில்லாத பிசினஸ் உங்களுக்கு சோர்வை அதிகமாக்கும். பருவநிலை மாற்றத்தினால் உங்களுக்கு சளித்தொந்தரவுகள் அதிகமாகும். கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். ஏழரை சனியின் சஞ்சாரமும், மூன்றாம் வீட்டில் மறையும் குருவும் சாதகமாக இல்லை எனவே வருட மத்தியில் நீங்க அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். விஷ்ணு சகஸ்ராநாமத்தை படிப்பது அவசியம். மகா மிருத்யூஞ்சய மந்திரத்தை சொல்வதால் நோய் பயம் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications