புத்தாண்டு ராசி பலன் 2024: இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் 2024 முதல் தலைகீழ் மாற்றம் வருமாம்
சென்னை: வாழ்க்கையே ஒரே துன்பமயமாக இருக்கே, நம்ம வாழ்க்கையில எப்போ ஒளி வீசும், நமக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும் என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கின்றனர். புத்தாண்டு 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு திடீர் திருப்பு முனையை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு பலன்: வாழ்க்கையில் நல்லது நடக்குமா? நாமளும் பணக்காரர்கள் ஆவோமா, நமக்கு விடிவு காலம் பிறக்குமா என்று ஏங்கித் தவிக்கிறீர்களா? இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டங்களுடன் வாழ்ந்தாகி விட்டது. இனி பிறக்கப் போகும் 2024ஆம் ஆண்டில் நமக்கு பிரச்சினை தீருமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த ராசி பலன். நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகின்றனர். ராகு கேதுவின் பயணம் சிலருக்கு ராஜயோகத்தை தரப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு. குரு பகவான் ஜென்ம ராசியில் பயணம் செய்வது அற்புதமான யோக சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து மேஷ ராசியை பார்வையிடுகிறார். 2024ஆம் ஆண்டு கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது. குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு இரண்டாம் வீட்டிற்கு வரப்போகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வது அற்புதமான யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு. பண மழை பொழியப்போகிறது. ராகு கேதுவும் விரைய ஸ்தானம் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் விபரீத ராஜயோக அமைப்பு உண்டாகிறது. எதிர்பாராத லாபம் கிடைக்கும். பதவி யோகம் கிடைக்கும். தலைமை பதவி கிடைக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது. 2024ஆம் ஆண்டு உங்களுக்காக யோகங்களைத் தரப்போகும் ஆண்டாக பிறக்கப் போகிறது.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, குரு பகவான் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார் என்றாலும் விரைய ஸ்தான குருவாக இருந்து திடீர் யோகத்தை கொடுத்து வந்தார். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் திருமணம் சுப யோகம் தேடி வரப்போகிறது. சனி பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து சச மகா யோகத்தை தருவது சிறப்பு. செய்யும் தொழிலில் லாபம் வரும். ராகு லாப ஸ்தானத்திற்கும் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் செல்வது சிறப்பு. 2024ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். உங்க சுய ஜாதகத்தில் தசாபுத்தி அற்புதமாக இருந்தால் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.

மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வருமானம் அற்புதமாக இருக்கும். அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. பாக்ய சனி உங்களுக்கு திடீர் பணவரவு, பதவியைத் தரப்போகிறார். ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பத்தில் ஒரு பாவி பதவியை தேடி தரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் சுகங்கள் தேடி வரும்.
கன்னி: 2024ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு மகத்தான ராஜயோகம், பதவி யோகம் கிடைக்கப் போகிறது. சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். விபரீத ராஜயோக அமைப்பாகும். சனிபகவான் ஆறுக்கு உடையவன். ஆறாம் வீட்டில் பயணம் செய்வது அற்புதம். 3,6,11 சனிபகவான் இந்த வீடுகளில் அமரும் போது சனிபகவான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார். அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் தற்போது எட்டாம் வீட்டில் பயணம் செய்தாலும் 2024ஆம் ஆண்டு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பலனுடன் குரு பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. இந்த யோகங்கள் பார்வையால் பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள். ராகு களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் கேது உங்கள் ராசிக்குள் பயணம் செய்வதால் சின்னச் சின்ன மனக்குழப்பங்கள் வந்து நீங்கும்.

தனுசு: 2024 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மே மாதத்திற்குப் பிறகு ஆறாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். குடும்ப ஸ்தானம் குதூகலமடையும் கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண வருமானம் அதிகரிக்கும். ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டது. சனி பகவான் மூன்றாம் வீட்டில் அமர்வது டாப்தான் கடந்த ஏழரை ஆண்டுகாலம் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப்போகிறது. 2024ஆம் ஆண்டு அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.
மீனம்: 2024 ஆண்டு சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனியும் குருவும் பதவி யோகம், ராஜயோகத்தை தருவார்கள். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் லாபத்தை தரும். 2024ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும் சொத்து சுகம் சேரும் காலம் வந்து விட்டது.












Click it and Unblock the Notifications