ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் 2024... புது வேலை.. புரமோசன்.. கலக்கப்போவது யாரு? செக் பண்ணுங்க
சென்னை: 2024 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலையால் பலரது வேலை கேள்விக்குறியானது. சம்பள உயர்வு வரவேயில்லை. புரமோசன் பற்றி கம்பெனிகள் மூச்சு விடவில்லை. 2024ஆம் ஆண்டில் வேலை கிடைக்குமா? கிடைத்த வேலை நிலைக்குமா? யாருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: லாபங்கள் நிறைந்த ஆண்டாக மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. எல்லோருக்கும் வேலை போன நேரத்தில் உங்களுக்கு வேலை கிடைத்தது காரணம் சனி, குரு, ராகு கேதுவின் நற்கருணையும் கிரகங்களின் பார்வையும்தான். நல்லதே நடக்கும் கிடைத்த வேலை நிலைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 2024ஆம் ஆண்டு பொற்கால ஆண்டாக இருப்பதால் உற்சாகமாக மன மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி அதி அற்புதமாக இருக்கும். லாபத்தை தரப்போகும் ராகுவினால் நிதி நெருக்கடிகள் விலகும். கடன்கள் குறையும். சினிமா ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையும். தொட்டது துலங்கும் வெற்றிகள் தேடி வரும். 2024ஆம் ஆண்டில் அறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்.
மிதுனம்: புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு குரு சாதகமான நிலையில் பயணம் செய்வதால் எந்த பிரச்சினை வந்தாலும் எளிதில் கடந்து விடுவீர்கள். தடைகள் எல்லாம் தகர்ந்து விடும். நன்மைகள் அதிகம் நடக்கும். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஒருமுறையேனும் திருநள்ளாறு சென்று வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.
கடகம்: சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே. சனிபகவான் அஷ்டம சனியாக பயணம் செய்கிறார். லாப வீட்டில் குருபகவான் அமர்கிறார். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் நலத்தில் கவனம் தேவை. உடம்புக்குள் இருந்த நோய்கள் வெளிப்படும். கடன்கள் வாங்க வேண்டாம். மருத்துவ செலவுகள் வரும். திருச்செந்தூரின் கடலோரத்தில் எழுந்தருளும் சுப்ரமணியரை சரணடையுங்கள் 2024ஆம் ஆண்டில் சவால்களை சமாளிப்பீர்கள்.
சிம்மம்: சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட கடன்கள் இன்று அடைபடும். வருடம் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடங்க முயற்சி செய்வீர்கள். கடன்கள் தீரும். அழகர் மலையில் குடிகொண்டிருக்கும் சுந்தரராஜ பெருமாளையும் பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானையும் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கன்னி: புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. ஆறாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் கஷ்டங்கள் குறையும் கவலைகள் மாறும். ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குருவின் பார்வையால் கை நிறைய சம்பளத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் கை கூடி வருகிறது. இந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கலாம். பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. மேலும் நன்மைகள் நடைபெற அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள் அற்புதங்கள் நிகழும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications