2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: விபரீத ராஜயோகம்.. வீடு முழுவதும் சந்தோஷம் யாருக்கு தேடி வரும்
சென்னை: எத்தனையோ சோதனைகளை கடந்து விட்டோம். பலரும் வேலைக்காக காத்திருக்கின்றனர். நம் வாழ்க்கையில் திருமணம் நடைபெறதா என்று பலரும் காத்திருக்கின்றனர். 2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து குரு பகவான் பார்வையிடுகிறார். நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. வருடம் முழுவதும் 6ஆம் வீட்டில் ராகுவும் 12ஆம் வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆவது வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பயணம் அஷ்டம ஸ்தானத்திற்கு நகர்கிறது.

குரு பகவான்: எட்டாம் வீட்டிற்கு குரு மாறினாலும் உங்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அவர் எட்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவது சுப நிகழ்வுகளையும் சுப செலவுகளையும் அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கப்போகிறது.
பொருளாதார நிலைமை: துலாம் ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். குரு பகவான் பார்வை 12ஆம் வீடு, 2ஆம் வீடு,4ஆம் வீடுகளின் மீது விழுகிறது. பல வழிகளில் இருந்தும் பணம் வரப்போகிறது. வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் கிரகப்பிரவேஷம் செய்வார்கள். நிலம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். நிறைய சுப விரைய செலவுகள் நடைபெறப்போகிறது.
பெண்களுக்கு மகிழ்ச்சி: பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள், முடிவுக்கு வரப்போகிறது. எத்தனையோ சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள் 2024ஆம் ஆண்டில் சாதனைகளை செய்யப்போகிறீர்கள். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்காக செய்த மருத்துவ செலவுகள் இனி முடிவுக்கு வரப்போகிறது.
சனி தரும் சந்தோஷம்: சனிபகவான் 5ஆம் வீட்டில் வலிமையான நிலையில் இருப்பதால் மிகப்பெரிய மாற்றங்களைத் தரப்போகிறது. பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். துலாம் ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள், எதிரிகள் தொல்லைகளை ராகு பகவான் தீர்க்கப்போகிறார். உங்களை விட்டு விலகிய சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு நாடி வந்து பேசுவார்கள்.
கேது பகவான்: வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். குழந்தைக்காக காத்திருக்கும் புதுமண தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 12ஆம் வீடு மோட்ச ஸ்தானம். அந்த இடத்தில் ஞான காரகன் கேது வருடம் முழுவதும் அமர்ந்திருப்பது சிறப்பான நிலை. ஆன்மீக பயணங்களை செய்யப்போகிறீர்கள். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு 2024ஆம் ஆண்டில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரப்போகிறது.












Click it and Unblock the Notifications