Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2018ம் வருடம் மீனம் ராசி பலன்கள்

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜன்மராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் உங்கள் ராசி நாதநாதனான குரு பகவான் குழந்தைகளால் மனக் கஷ்டத்தை உண்டாகும், பணம் கையிருப்பு குறையும், இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது செல்வச் செழிப்பை அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பது தொழில் நிலை சிறப்பைத் தரும். இந்த ஆண்டு முழுவதும் ராகு ஐந்தாமிடத்திலும் கேது பதினொன்றாமிடத்திலும் சஞ்சரிப்பது கலைகளில் ஆர்வத்தை கொடுக்கும், மனதில் உண்டாகும் ஆசைகள் நிறைவேறும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 prediction meenam rasi

ஜனவரி :

சூரியன் இம்மாதம் 14ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பூர்வீக நிலம் வீடு வகையில் பங்கு கிடைக்கும் புதன் இம்மாதம் 06ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் கூட்டுத் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் மேலும் 28ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குரு எட்டாமிடத்தில் இருப்பது பண வரவில் தாமதமாகும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருப்பது எல்லா செயல்களும் வெற்றியடையும் இம்மாதம் 13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது சுகபோகமானப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சனி இந்த ஆண்டு முழுவதும் பத்தாமிடத்தில் இருப்பது கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பது பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது பல நாட்களாக நினைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும்.

பிப்ரவரி :

சூரியன் இம்மாதம் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் 07ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தீயணைப்பு துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது கல்வியில் நாட்டத்தை அதிகரிக்கச் செய்யும் சுக்கிரன் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் :

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் 20ம் தேதி மூன்றாமிடத்திற்க்கு வருகிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்.
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பணியாளர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும் புதன் 09ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் கமிஷன் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் சுக்கிரன் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் :

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் 10ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்பு 25ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் 09ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை :

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அப்பா சம்பாதித்த சொத்துக்கள் கிடைக்கும் சுக்கிரன் 05ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் சச்சரவு உண்டாகும்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் :

சூரியன் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளின் விஷயங்களில் கவனம் தேவை சுக்கிரன் 01ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உருவாகும்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் :

சூரியன் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும் 19ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும் சுக்கிரன் 01ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயங்களில் கவனம் தேவை.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் :

சூரியன் 18ம் தேதி எட்டாமிடத்த்திற்கு வருகிறார் வீட்டில் பெரியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் புதன் 06ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் சிதறும் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கும். இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் :

சூரியன் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும் செவ்வாய் 06ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடுகள் செய்வீர்கள்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் :

சூரியன் 16ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் செவ்வாய் 23ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உடன் பிறப்புகளினால் நன்மை உண்டாகும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+