For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2018ம் வருடம் கும்பம் ராசி பலன்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜன்மராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கச் செய்வார், தெய்வீக அருள் நிறைந்திருக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது தொழிலில் மேன்மையையும், தொழில் லாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசி நாதநாதனான சனிபகவான் பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பது எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். இந்த ஆண்டு முழுவதும் ராகு ஆறாமிடத்திலும் கேது பன்னிரெண்டாமிடத்திலும் சஞ்சரிப்பது எதிரிகளை வெல்லும் மன தைரியத்தை கொடுக்கும், திருக்கோயில் பணிகளை மேற்கொள்வீர்கள்.
இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 prediction kumba rasi

ஜனவரி :

சூரியன் இம்மாதம் 14ஆம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகை தொழில் நிலை மேன்மையடையும். புதன் இம்மாதம் 06ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும் மேலும் 28ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும். குரு ஒன்பதாமிடத்தில் இருப்பது பொருளாதார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருப்பது புதிதாக நகைகளை வாங்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இம்மாதம் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சனி இந்த ஆண்டு முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருப்பது இதுவரை பட்ட கடன்களை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுவீர்கள் கேது இந்த ஆண்டு முழுவதும் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது ஆன்மீகத்திற்காக செலவுகளைஅதிகரிக்கச் செய்யும்.

பிப்ரவரி :

சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் பத்தாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையினருக்கு பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். புதன் இம்மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறலாம் சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் சந்தோஷம் அதிகரிக்கச் செய்யும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும். செவ்வாய் 07ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வகையில் வருமானம் அதிகமாக உண்டாகும் புதன் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பேச்சில் திறமை அதிகரிக்கும். சுக்கிரன் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் 26ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் :

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செய்வீர்கள். சுக்கிரன் 20ம் தேதி நான்காமிடத்திற்க்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கீடு கிடைக்கும் செவ்வாய் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுக்காக செலவு உண்டாகும் புதன் 09ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் சுக்கிரன் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் :

இந்த மாதம் சூரியன் 15ஆம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். புதன் 10ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் 25ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகள் அதிகரிக்கும். சுக்கிரன் 09ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை :

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உழைப்பு அதிகரிக்கும் சுக்கிரன் 05ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் நன்மை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் :

சூரியன் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தின் காரணமாக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் 01ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பிரயாணத்தின் போது விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் :

சூரியன் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும் புதன் 02ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்திற்க்காக வெளியூருக்கு செல்வீர்கள் 19ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது சிறப்பு. சுக்கிரன் 01ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் :

சூரியன் 18ம் தேதி ஒன்பதாமிடத்த்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து கொண்டு வரும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். புதன் 06ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்பைத் தரும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்பைத் தரும். குரு 11ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும்.

இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் :

சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் 06ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் உண்டாகும் கோபத்தை தவிர்க்கவும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் :

சூரியன் 16ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 23ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

English summary
This article explains about the yearly horoscope for the year 2018 prediction based on the moon sign Mesham,Rishapam, Mithunam and Katakam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X