Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2018ஆம் ஆண்டு மகரம் ராசி பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2018 ஆம் புத்தாண்டு பிறந்துள்ளது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகாரர்கள் 2018 ஆம் ஆண்டு தங்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பொது பலன்களை அறிந்து கொள்வோம்.

2018ம் வருடம் மகரம் ராசி பலன்கள்

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜன்மராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் தொழில் உத்தியோகம் மேம்படச் செய்வார் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது பண வரவையும் லாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பது அலைச்சலையும் செலவுகளையும் அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் ராகு ஏழாமிடத்திலும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பது நண்பர்களுடன் நல்லுறவைக் கொடுக்கும் மனக் குழப்பத்தை தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 prediction makara rasi

ஜனவரி :

சூரியன் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மனை வாங்கி விற்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதன் இம்மாதம் 06ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் மேலும் 28ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குரு பத்தாமிடத்தில் இருப்பது தொழில் நிலை சிறப்பாக இருக்கும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் சனி இந்த ஆண்டு முழுவதும் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தொழில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவை நிலவச் செய்யும் கேது இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

பிப்ரவரி :

சூரியன் இம்மாதம் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினில் அதிகாரம் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வியாபாரத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் செவ்வாய் 07ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மின்சார சாதனங்கள் பழுது பார்க்கும் வகையில் செலவுகள் அதிகமாக உண்டாகும் புதன் 03ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். சுக்கிரன் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வெளியூர் பயணம் அதிகரிக்கும் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக கார் வாங்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் :

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீட்டை மராமத்து செய்து அழகு படுத்துவீர்கள் சுக்கிரன் 20ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா தேர்வுகளிலும் அதிகமான மதிப்பெண் கிடைக்ம் செவ்வாய் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் புதன் 09ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் உன்னத நிலை உண்டாகும். சுக்கிரன் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை ஏற்படும்.
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் :

இந்த மாதம் சூரியன் 15ஆம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். புதன் 10ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் 25ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் பிரச்சினை உண்டாகும் சுக்கிரன் 09ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை :

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் காரணமாக நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் 05ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் :

சூரியன் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் செயல்பாடுகள் மனக் கஷ்டத்தை உண்டாகும். சுக்கிரன் 01ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் :

சூரியன் 17ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 19ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் சுக்கிரன் 01ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் :

சூரியன் 18ஆம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழில் சிறப்படையும் புதன் 06ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்பைத் தரும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் சம்பந்தமான படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் குரு 11ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பண வருமானம் தொழில் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் :

சூரியன் 17ஆம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் செய் தொழில் சிறப்படையும் செவ்வாய் 06ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் :

சூரியன் 16ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 23ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+