Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2018ஆம் ஆண்டு தனுசு ராசி பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2018 ஆம் புத்தாண்டு பிறந்துள்ளது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகாரர்கள் 2018 ஆம் ஆண்டு தங்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பொது பலன்களை அறிந்து கொள்வோம்.

2018ம் வருடம் தனுசு ராசி பலன்கள்

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜன்மராசிக்கு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவானால் தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறச் செய்யும் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது செலவுகள் அதிகரிக்கும், ஒரு முறைக்கு பல முறை யோசித்து செலவழிப்பது நல்லது. இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது மனதில் சஞ்சலத்தைக் கொடுக்கும், உடல் உழைப்பு அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் ராகு எட்டாமிடத்திலும் கேது இரண்டாமிடத்திலும் சஞ்சரிப்பது வாகனப் போக்குவரத்தில் கவனமாக இருக்க வேண்டும், தேவையற்ற வீண் விதண்டாவிதப் பேச்சுகளை தவிர்க்க வேண்டும்.

இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 prediction dhanusu Rasi

ஜனவரி :

சூரியன் இம்மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கம் மூலம் வர வேண்டிய பணம் வந்து சேரும் செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாங்கும் வகையில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் இம்மாதம் 06ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்பட்டு அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள் மேலும் 28ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு பதினொன்றாமிடத்தில் இருப்பது பண புழக்கம் சரளமாக இருக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் இம்மாதம் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பொன்னகைகளை வாங்குவீர்கள் சனி இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பது தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும் கேது இந்த ஆண்டு முழுவதும் இரண்டாமிடத்திலிருப்பது குடும்பத்தில் சிறு சிறு சச்சரவைக் கொடுக்கும்.

பிப்ரவரி :

சூரியன் இம்மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் பதினொன்றாமிடத்தில் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வெளியூருக்கு அடிக்கடி பிரயானம் செல்லும் நிலையைக் கொடுக்கும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பள்ளியில் வேலை கிடைக்கும் செவ்வாய் 07ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகமாக உண்டாகும் புதன் 03ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது படிப்பில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது பொழுதுபோக்கு விஷய்ங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் :

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் பூர்வீக சொத்திலிருந்து வருமானம் உண்டாகும். சுக்கிரன் 20ம் தேதி ஆறாமிடத்திற்க்கு வருகிறார் கடன் வாங்குவதை தவிர்க்கவும்
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். செவ்வாய் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் பண வருமானம் அதிகரிக்கும் புதன் 09ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் மனைவியுடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் :

இந்த மாதம் சூரியன் 15ஆம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சம்பந்தமாக வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்படலாம் புதன் 10ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வியாபார விஷயங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்கவும் 25ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் சுக்கிரன் 09ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் மன சங்கடம் உண்டாகும்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை :

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் சுக்கிரன் 05ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வத்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் :

சூரியன் 17ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சுக்கிரன் 01ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா காரியங்களும் சிறப்படையும்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் :

சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வரும் தொழில் சிறப்படையும் புதன் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் 19ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சுக்கிரன் 01ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனைவி மூலம் எண்ணங்கள் ஈடேறும்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் :

சூரியன் 18ம் தேதி பதினொன்றாமிடத்த்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் புதன் 06ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும் குரு 11ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.
இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் :

சூரியன் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு வெளியூருக்கு இடமாற்றம் உண்டாகும் செவ்வாய் 06ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் :

சூரியன் 16ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 23ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+