For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2018ஆம் ஆண்டு விருச்சிகம் ராசி பலன்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜன்மராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் குழந்தைகளுக்காகவும் வீட்டு சுப மங்கள விஷேசங்களுக்காகவும் அதிகமான செலவுகளை செய்யும் நிலையை உருவாக்குவார் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பண வருமானத்தில் தடையைக் கொடுக்கும், குடும்ப பூசலை அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் ராகு ஒன்பதாமிடத்திலும் கேது மூன்றாமிடத்திலும் சஞ்சரிப்பது தந்தை வர்க்கங்கள் வகையில் பிரச்சினையையும் மனக் குழப்பத்தையும் அதிகரிக்க செய்யும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 prediction Viruchigam Rasi

ஜனவரி :

சூரியன் இம்மாதம் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீட்டை விட்டு வெளியேறிடும் நிலை வரும் செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் புதன் இம்மாதம் 06ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது மேலும் 28ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது புத்தியில் சஞ்சலத்தைக் கொடுக்கும் குரு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தேவையற்ற வீண் செலவு அதிகரிக்கும் சுக்கிரன் இரண்டாமிடத்திலிருப்பது குடும்ப செலவுகளை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலையை உண்டாகும் சனி இந்த ஆண்டு முழுவதும் இரண்டாமிடத்தில் இருப்பது பொருளாதார சிக்கலைக் கொடுக்கும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது பரம்பரை சொத்துக்களிலில் வில்லங்கத்தைக் கொடுக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்திலிருப்பது மன சஞ்சலத்தைக் கொடுக்கும்.

பிப்ரவரி :

சூரியன் இம்மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேன்டிய தொகைகளை செலுத்திவிடுவது நல்லது. செவ்வாய் இம்மாதம் முழுவதும் பன்னிரெண்டாமிடத்திலேயே அமர்ந்திருப்பது நிலம் வீடு வகைகளில் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் புதன் இம்மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டத்தக் கொடுக்கும் .சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கல்வியில் ஆர்வம் உண்டாகும். செவ்வாய் 07ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் குத்தைகை வாடகை மூலம் வருமானம் உண்டாகும் புதன் 03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது உல்லாசப்பயணம் செல்வீர்கள் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் :

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் பிரச்சினை உண்டாகும். சுக்கிரன் 20ம் தேதி ஆறாமிடத்திற்க்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும்.
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே :

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் மேன்மை உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் புதன் 09ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் சுக்கிரன் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் :

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி .எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் பலவித கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் புதன் 10ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் 25ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவும் சுக்கிரன் 09ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை :

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி நீண்ட தூரம் பிரயாணம் செல்வீர்கள் சுக்கிரன் 05ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிலை சிறப்படையும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் :

சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் சுக்கிரன் 01ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் :

சூரியன் 17ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் புதன் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் செலவுகளில் கவனம் தேவை 19ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள். சுக்கிரன் 01ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் :

சூரியன் 18ம் தேதி பன்னிரெண்டாமிடத்த்திற்கு வருகிறார் அலைச்சல் அதிகரிக்கும் புதன் 06ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் லாபம் அதிகரிக்கும் 26ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைக் கொடுக்கும் குரு 11ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் :

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அதிகாரிகளால் நன்மை உண்டாகும் செவ்வாய் 06ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் தொழிலுக்காக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் :

சூரியன் 16ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் செவ்வாய் 23ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

English summary
This article explains about the yearly horoscope for the year 2018 prediction based on the moon sign Mesham,Rishapam, Mithunam and Katakam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X