2018ஆம் ஆண்டு துலாம் ராசி பலன்கள்
துலாம் ராசிக்காரர்களே... இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் மனதில் சந்தோஷத்தையும் சமுதாயத்தில் அந்தஸ்தையும் கொடுப்பார் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது பண வருமானத்தையும் வங்கி சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் .செல்லும் நிலையைக் கொடுக்கும், மன தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் ராகு பத்தாமிடத்திலும் கேது நாங்காமிடத்திலும் சஞ்சரிப்பது தொழில் வெற்றியையும், கல்வியில் ஆர்வத்தையும் அதிகரிக்க செய்யும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

ஜனவரி :
சூரியன் இம்மாதம் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் ஏற்கனவே அரசாங்க வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் மருத்துவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் 06ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் மேலும் 28ம் தேதி நான்காமிடத்திற்க்கு வருவது புதிதாக வீடு வாங்கும் யோகத்தைக் கொடுக்கும் குரு ஜென்ம .ராசியில் இருப்பது மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். சுக்கிரன் மூன்றாமிடத்திலிருப்பது அண்டை அயலாரால் நன்மை உண்டாகும் இம்மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது உறவினர் புதிதாக வாகனம் வாங்கும் யோகத்தைக் கொடுக்கும். சனி இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்தில் இருப்பது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் எடுத்த காரியமெல்லாம் வெற்றி பெறச் செய்யும் கேது இந்த ஆண்டு முழுவதும் நான்காமிடத்திலிருப்பது வீடு கட்டும் யோகத்தைக் கொடுக்கும்
பிப்ரவரி :
சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள் . செவ்வாய் இம்மாதம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்திருப்பது கோபத்தை குறைத்துக் .கொள்வது நல்லது. புதன் இம்மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகள் .லாபத்தைத் தரும்....சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது பொழுதுபோக்கு விஷயங்க்களில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.
மார்ச் :
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.. செவ்வாய் 07ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் புதன் 03ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது பெண்களால் தொல்லை உண்டாகும் 26ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு உண்டாகும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஏப்ரல் :
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் காரணமாக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் 20ம் தேதி எட்டாமிடத்திற்க்கு வருகிறார் பொன்னகைகளை யாருக்கும் இரவல் தர வேண்டாம். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
மே :
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுடன் மனஸ்தாபம் உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள் புதன் 09ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் சுக்கிரன் 14ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் மனைவியினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூன் :
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி .ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் புதன் 10ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும் 25ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் சுக்கிரன் 09ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூலை :
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார் அரசு வேலைக்கு பதிவு செய்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சுக்கிரன் 05ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஆகஸ்ட் :
சூரியன் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.. சுக்கிரன் 01ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
செப்டம்பர் :
சூரியன் 17ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் நிலை வரும். புதன் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வியாபார தந்திரம் அதிகரிக்கும் 19ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினாலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் சுக்கிரன் 01ம் தேதி உங்கள் ஜென்ம் ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
அக்டோபர் :
சூரியன் 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அலைச்சல் அதிகரிக்கும் புதன் 06ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மதி நுட்பம் அதிகரிக்கும் குரு 11ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பண வருமானத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
நவம்பர் :
சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்கு சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 06ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
டிசம்பர் :
சூரியன் 16ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடம் மாறும் நிலை உண்டாகும். செவ்வாய் 23ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் நெருப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications