Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிஷபம் ராசி புத்தாண்டு பலன் 2018

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் பொருளாதாரத்தில் கஷ்ட நிலையைக் கொடுப்பார், பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் உண்டாகும் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது பொருளாதார வகையிலும், குழந்தைகளின் வகையிலும் மனக் சந்தோஷத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மனதில் பாரத்தைக் கொடுக்கும், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்கள் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், அலைச்சல் அதிகரிக்கும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 - mesham to Kadakam prediction

ஜனவரி :

சூரியன் இம்மாதம் 14ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். புதன் இம்மாதம் 06ம் தேதி எட்டாம் இடத்திற்க்கு வருகிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும் மேலும் 28ம் தேதி ஒன்பதாமிடத்திற்க்கு வருவது உயர் கல்வியில் மேன்மை நிலையைக் கொடுக்கும். . குரு ஆறாம் இடத்திலிருப்பது அடிக்கடி குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சுக்கிரன் எட்டாமிடத்திலிருப்பது விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இம்மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும். சனி இந்த ஆண்டு முழுவதும் எட்டாமிடத்தில் இருப்பது உடலில் அசதி கொடுக்கும். ராகு இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்தில் இருப்பது மனதில் குழப்பத்தைக் கொடுக்கும். கேது இந்த ஆண்டு முழுவதும் ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

பிப்ரவரி

சூரியன் இம்மாதம் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஏழாமிடத்திலேயே அமர்ந்திருப்பது வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் இம்மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகளை சிறப்படையச் செய்யும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலையைக் கொடுக்கும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் 07ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகன விபத்துக்கள் உண்டாகலாம் கவனம் தேவை. புதன் 03ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது மனைவியால் சந்தோஷம் அதிகரிக்கும் 26ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள அதிகரிக்கும். சுக்கிரன் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பா சம்பாதித்து வைத்த வீடு கிடைக்கும் புதன் 09ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். சுக்கிரன் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன்

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினில் அதிகாரம் அதிகரிக்கும் புதன் 10ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 25ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் 09ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மாறும் நிலை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் 05ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிய வாங்கும் எண்ணம் நிறைவேறும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட்

சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். சுக்கிரன் 01ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர்

சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் புதன் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும் 19ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் உண்டாகும். சுக்கிரன் 01ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர்

சூரியன் 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். புதன் 06ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 26ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். குரு 11ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கடன்களை எல்லாம் அடைத்துவிடுவீர்கள். இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர்

சூரியன் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசு உயர் அதிகாரிகளுக்கு இட மாற்றம் உண்டாகும் செவ்வாய் 06ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர்

சூரியன் 16ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் செயல்பாடுகள் மனக்கஷ்டத்தைக் கொடுக்கும். செவ்வாய் 23ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் நிலபுலன்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+