Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிதுனம் ராசி புத்தாண்டு பலன் 2018

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு துவக்கத்தில் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் பொருளாதாரத்தில் மேன்மை நிலையைக் கொடுப்பார், குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும் இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் சப்தம கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பது வியாபார விருத்தியைக் கொடுக்கும், அனைத்து உறவினர்களிடமும் நல்லுறவு நீடிக்கும். இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்கள் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது செல்வச் சேர்க்கையை அதிகப்படுத்தும், திடீர் யோகத்தை கொடுக்கும்.

இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

ஜனவரி

சூரியன் இம்மாதம் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும் புதன் இம்மாதம் 06ம் தேதி ஏழாம் மந்தமாக இருந்த வியாபாரம் விருவிருப்படையும் மேலும் 28ம் தேதி எட்டாமிடத்திற்க்கு வருவது தாய் மாமனின் செயல்கள் சங்கடத்தைக் கொடுக்கும். . குரு ஐந்தாம் இடத்திலிருப்பது அடிக்கடி பரம்பரை சொத்திலிருந்து பண வரவைக் கொடுக்கும் சுக்கிரன் ஏழாமிடத்திலிருப்பது கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். சனி இந்த ஆண்டு முழுவதும் ஏழாமிடத்தில் இருப்பது வியாபார வாடிக்கையாளர்களிடம் நல்லுறவை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் இரண்டாமிடத்தில் இருப்பது வங்கியில் டெபாசிட் சேமிப்பு அதிகரிக்கும். கேது இந்த ஆண்டு முழுவதும் எட்டாமிடத்திலிருப்பது எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

பிப்ரவரி

சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆறாமிடத்திலேயே அமர்ந்திருப்பது நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. புதன் இம்மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது ஒப்பந்தத் தொழிலை சிறப்படையச் செய்யும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும் நிலையைக் கொடுக்கும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும். செவ்வாய் 07ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும் புதன் 03ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழிலில் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 20ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்க்கு வருகிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை அதிகமாக வாங்குவீர்கள். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


மே

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் செவ்வாய் 02ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் மின்சார சாதனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை புதன் 09ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பெண்களால் நன்மை உண்டாகும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன்

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு கிடைக்கும் புதன் 10ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 25ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் சுக்கிரன் 09ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு நிறுவனங்களிலிருந்து பண வருமானம் அதிகரிக்கும் சுக்கிரன் 05ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட்

சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அலுவலகத்திலிருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் 01ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் நான்கு சக்கர வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர்

சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் வீடு கிடைக்கும் புதன் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுப மங்கள தகவல் கிடைக்கும் 19ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் 01ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர்

சூரியன் 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பட்டம் பதவி கிடைக்கும் புதன் 06ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு 11ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் செலவு வகைகளில் கவனம் தேவை. இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர்

சூரியன் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் செவ்வாய் 06ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும்.
இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர்

சூரியன் 16ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழிலின் காரணமாக அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் 23ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறந்த சகோதரர்களுக்கு தொழில் மேன்மை நிலை அடையும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+