கடகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2018

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு துவக்கத்தில் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார், சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது வாரிசுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பது எதிரிகளால் தொல்லையை கொடுக்கும், உடல் உழைப்பு அதிகரிக்கும் இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது மனக் குழப்பத்தை கொடுக்கும், நண்பர்களிடையே பகையை உண்டாக்கும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

New year rasi palangal 2018 prediction Katakam

ஜனவரி

சூரியன் இம்மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் காரணமாக நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் கணிதத்தில் புலமை உண்டாகும் புதன் இம்மாதம் 06ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் மேலும் 28ம் தேதி ஏழாமிடத்திற்க்கு வருவது வியாபாரம் விருத்தியாகும் . குரு நான்காம் இடத்திலிருப்பது புதிதாக வாகனம் வாங்கும் அதிர்ஷ்டத்தை தரும் சுக்கிரன் ஆறாமிடத்திலிருப்பது பெண்களால் தொல்லை உண்டாகும் இம்மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது மனைவியின் உதவி கிடைக்கும் சனி இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்தில் இருப்பது உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது புத்தியில் குழப்பத்தை கொடுக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் ஏழாமிடத்திலிருப்பது உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிப்ரவரி

சூரியன் இம்மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஐந்தாமிடத்திலேயே அமர்ந்திருப்பது கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது மனைவியின் உறவினர்களால் மனக்கஷ்டம் உண்டாகும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உத்தியோக வகையில் இட மாற்றம் உண்டாகும் செவ்வாய் 07ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும் புதன் 03ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது கடவுள் பக்தியை அதிகரிக்கச் செய்யும் சுக்கிரன் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது வேலை தேடும் பெண்களுக்கு வேலை கிடைக்கும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி பதினொன்றாமிடத்திற்க்கு வருகிறார் புதிதாக மனைவிக்கு நகைகள் வாங்குவீர்கள்.
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும் செவ்வாய் 02ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் 09ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும் சுக்கிரன் 14ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன்

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது நல்லது புதன் 10ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார வகையில் முதலீடுகள் அதிகரிக்கும். 25ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் சுக்கிரன் 09ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் சுக்கிரன் 05ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட்

சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் சுக்கிரன் 01ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும்.
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர்

சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூர் பயணம் உண்டாகும் புதன் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 19ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் சுக்கிரன் 01ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அழகான ஆடைகளை வாங்குவீர்கள்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர்

சூரியன் 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு மனை கிடைக்கும் புதன் 06ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் சில்லறை வியாபாரம் சிறப்படையும் குரு 11ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் வாங்கியிருந்த கடன்கள் எல்லாவற்றையும் செலுத்திவிடுவீர்கள். இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர்

சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு தேர்வில் வெற்றி கிடைக்கும் செவ்வாய் 06ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனப் போக்குவரத்தில் காயம் ஏற்படலாம் கவனம் தேவை. இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர்

சூரியன் 16ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் 23ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+