2018ம் ஆண்டு சிம்மம் ராசி பலன்கள்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் அலைச்சலையும் மனக் கஷ்டத்தையும் கொடுப்பார் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது புதிதாக வாகனம் வாங்கக் கூடிய எண்ணத்தை நிறைவேற்றும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது கடன்கள் நிவர்த்தியாகும் பூர்வீக சொத்துக்களை கொடுக்கும் இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்கள் பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பது அன்னிய தேச பிரயாணத்தைக் கொடுக்கும் மன தைரியம் அதிகரிக்க செய்யும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

ஜனவரி :
சூரியன் இம்மாதம் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் எதிரிகளை வெல்லும் மன தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள் புதன் இம்மாதம் 06ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கச் செய்யும் மேலும் 28ம் தேதி ஆறாமிடத்திற்க்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவை உண்டாக்கும். குரு மூன்றாம் இடத்திலிருப்பது அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலையைக் கொடுக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்திலிருப்பது கலைகளில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும் சனி இந்த ஆண்டு முழுவதும் ஐந்தாமிடத்தில் இருப்பது மன சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது செலவுகள் அதிகரிக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்திலிருப்பது கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பிப்ரவரி :
சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிமித்தம் வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும் செவ்வாய் இம்மாதம் முழுவதும் மூன்றாமிடத்திலேயே அமர்ந்திருப்பது சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது மனைவியால் நன்மை உண்டாகும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.
மார்ச் :
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக மனதில் பாரம் உண்டாகும் செவ்வாய் 07ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தீயணைப்பு துறையில் வேலை வேண்டுபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதன் 03ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது வியாபார கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது கடவுளின் அனுகிரகம் கிடைக்கும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஏப்ரல் :
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பணியாளர்களுக்கு நீண்ட தூரத்திற்க்கு பணியிட மாற்றம் உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி பத்தாமிடத்திற்க்கு வருகிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் மனையின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
மே :
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வீடு மனை வகையில் சிக்கல் உண்டாகும் புதன் 09ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு தொடர்பு கிடைக்கும். சுக்கிரன் 14ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் நகைகளை வாங்குவீர்கள்.
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூன் :
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் புதன் 10ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் கமிஷன் வியாபார வகையில் லாபம் அதிகரிக்கும். 25ஆம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் கல்விக்கான செலவுகள் அதிகரிக்கும் சுக்கிரன் 09ஆம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதனால் செலவுகள் அதிகரிக்கும்.இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூலை :
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் 05ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் திருமாகதவர்களுக்கு பெண் நிச்சயமாகும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஆகஸ்ட் :
சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் சுக்கிரன் 01ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினில் இனிமை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
செப்டம்பர் :
சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் மொத்தமாக குடும்ப வருமானம் அதிகரிக்கும் புதன் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 19ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். சுக்கிரன் 01ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
அக்டோபர் :
சூரியன் 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும் புதன் 06ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனம் சந்தோஷமடையக் கூடிய வகையில் நல்ல தகவல் கிடைக்கும் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கல்வி நிலை சிறப்படையும் குரு 11ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அசையாச் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
நவம்பர் :
சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் 06ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
டிசம்பர்
சூரியன் 16ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் 23ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் மின்சார சாதனங்களை கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications