நவம்பர் மாத ராசி பலன் 2023: வீடு தேடி வரும் பொன் மகள்.. யோக காலம் யாருக்கு?
சென்னை: சொத்து சுகம் இழந்து துன்பப்பட்டவர்கள் வாழ்க்கையில் பொற்காலம் வந்து விட்டது. கஷ்டங்கள் நீங்கி கவலைகள் மறைந்து யோக காலம் பிறக்கப்போகிறது. குரு பகவானின் பொன்னான பார்வையால் பொன் மகள் வீடு தேடி வரப்போகிறார். நவம்பர் மாதத்தில் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் உங்களுக்கு 5ஆம் வீட்டில் தனித்த குருவின் பார்வை சிறப்பாக கிடைக்கிறது. சனி பகவான் மூன்றாம் வீட்டில் நேர்கதியில் பயணம் செய்கிறார். ராகு நான்காம் வீட்டிலும் கேது சுக்கிரன் பத்தாம் வீட்டிலும் இணைந்திருக்கின்றனர். லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் இணைந்துள்ளன. இந்த மாதத்தில் உங்களுக்கு பண வருமானம் பஞ்சமில்லாமல் இருக்கும். உங்களுக்கு இனி விடிவு காலம்தான்.

வெற்றிகள் தேடி வரும்: பொன்னான காலம்தான் உங்களுக்கு மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். சனிபகவானும் சகாயங்களை செய்யப்போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பதவி யோகம் தேடி வரப்போகிறது.வேலை மாற்றம் புரமோசன் கிடைக்கும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. சுக்கிரன் நீச்சமடைந்தாலும் கவலைப்பட வேண்டாம் கெட்டவன் கெட்டாலும் ராஜயோகம்தான். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். இழந்தவைகளை நீங்கள் திரும்பவும் அடையப்போகிறீர்கள் நவம்பர் மாதம் அற்புதமாக இருக்கப்போகிறது.
மகரம்: உங்கள் ராசி நாதன் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ராகு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. கேது சுக்கிரன் உடன் 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். செவ்வாய், சூரியன், புதன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். செவ்வாய் சூரியன் சேர்க்கை பதவி யோகத்தை தரப்போகிறது. குரு பகவானின் பார்வையும் பத்தாம் வீட்டில் விழுவதால் யோகம் தேடி வரப்போகிறது. வேலை, தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்காதீர்கள்.
மன நிம்மதி: வீடு இடம் மாற்றம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கலாம். திருமணம் சுபகாரியம் கைகூடி வரும். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் போது பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நவம்பர் மாதத்தில் சிக்கல்கள் மன குழப்பங்கள் விலகும். தெளிவான மனநிலையோடு யோசிப்பீர்கள். மாணவர்களுக்கு புதன் சூரியன் சேர்க்கை யோகத்தை தரப்போகிறது. தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மகிமை நிறைந்த மன நிம்மதி தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications