நவம்பர் மாத ராசி பலன் 2023: சோதனை மேல் சோதனை.. சாதிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் சில ராசிகளில் பிறந்தவர்கள். சனி ஒரு பக்கம் சங்கடத்தை தருகிறார். ராகுவும் கேதுவும் ரணப்படுத்துகிறார்கள். குரு பார்வையும் கிடைக்கலேயே என்ற கவலை பலருக்கு உள்ளது. நவ கிரகங்களின் சஞ்சாரம் பார்வையால் நவம்பர் மாதத்தில் கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.
கன்னி: நவம்பர் மாதத்தில் உங்கள் ராசியில் கேது பயணம் செய்கிறார் 7ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருக்க சூரியன், செவ்வாய், புதன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். சனி ஆறாம் வீட்டிலும் குரு எட்டாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். சுக்கிரன் உங்கள் ராசியில் கேது உடன் இணைகிறார். இந்த மாதத்தில் முதல் 15 நாட்கள் அமைதியாக கடந்து விடுவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வரும் சிக்கல்கள், பிரச்சினைகளை எளிதில் கடந்து விடுங்கள்.

நிதானம் தேவை: ராகு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். புதிய முயற்சிகளில் தடைகளை தாண்டித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கும். கேது உங்கள் ராசியில் சுக்கிரன் நீச்சமடைந்து பயணம் செய்யவதால் பெரிய அளவில் இந்த மாதம் பண வருமானம் வர வாய்ப்பில்லை. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. இருக்கும் வேலையை கவனமாக செய்யுங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள்.
சோதனை மேல் சோதனை: புதன் சூரியனுடன் இணைந்து மாத பிற்பகுதியில் விருச்சிக ராசிக்கு செல்கிறார். மனம் சஞ்சலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பெண்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உறவுகளுடன் சண்டை சச்சரவுகளுடன் சலசலப்பும் வருவதால் இந்த நவம்பர் மாதத்தில் மவுன விரதம் இருப்பது நல்லது. திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேச சரியான நேரமில்லை. காதல் கசக்கும் கவனம் தேவை.
துலாம்: சுக்கிரன் உங்கள் ராசி அதிபதி இந்த மாதத்தில் 12ஆம் வீட்டில் நீச்சமடைந்து கேது உடன் பயணம் செய்கிறார். ராகு கேது சாதகமாக உள்ளது. ராசியில் சூரியன், புதன், செவ்வாய் இணைந்து பயணம் செய்கின்றனர். வேலையில் புரமோசன் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். குரு பகவான் பார்வையால் வீடு, சொத்து வாங்கலாம். சுக்கிரன் நீச்ச நிலையில் பயணம் செய்யும் காலத்தில் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
மகிழ்ச்சியான மாதம்: பிள்ளைகளுக்காக இந்த மாதம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவு நேர உணவுகளை தவிர்த்து விடுங்கள். புத்தி தெளிவாக இருக்கும். வாழ்க்கைத்துணைக்கு தேவையானவைகளை வாங்கிக்கொடுப்பீர்கள். பண்டிகை காலமாக இருப்பதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். நவம்பர் மாதம் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
விருச்சிகம்: வாழ்க்கையே போர்க்களம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இந்த மாதம் முற்பகுதியை விட பிற்பகுதிதான் அற்புதமான பலன்கள் கிடைக்கும். 4ஆம் வீட்டில் சனி, 5ஆம் வீட்டில் ராகு ஆறாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், லாப ஸ்தானத்தில் கேது சுக்கிரன் என இந்த மாதம் கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாத முற்பகுதியில் பண்டிகை காலம் என்பதால் நிறைய விரைய செலவுகள் வந்து போகும். எத்தனையோ சிக்கல்கள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். பண வருமானம் பாக்கெட் நிறைய வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.
வெற்றிகள் தேடி வரும்: சனி பகவான் தடைகளை கொடுத்தாலும் வெற்றிகளை பெறுவீர்கள். மாத பிற்பகுதியில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார். ருச்சிக யோகம் கிடைக்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். போராட்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண வருமானம் வந்தாலும் கையில் நிற்கலையே என்று கவலைப்படுவீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் வெற்றிகளை தேடித்தரும்.
தள்ளிப்போடுங்கள்: லாப ஸ்தானத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை இருக்கிறது. சுக்கிரன் நீசமடைந்து பயணம் செய்வதால் இந்த மாதம் திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசாமல் இருப்பது நல்லது. பெண்கள், இல்லத்தரசிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். இளைஞர்கள். இளம் பெண்களுக்கு நிறைய காதல் தொந்தரவுகள் வரும். யோசியுங்கள். அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு அவதிப்படாதீர்கள். ஆரோக்கியத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. நவம்பர் மாதத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications