Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பர் மாதம் 2019: தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு பலன்கள் எப்படி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    02-11-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

    சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நகர்கிறார். புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து மாத இறுதியில் தனுசு ராசிக்கு நகர்கிறார். ராகு மீனம் ராசியிலும் சனி கேது குரு கூட்டணி தனுசு ராசியிலும் இணைந்துள்ளது.
    இந்த கிரகப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

    இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. கந்த சஷ்டி விரத காலம் திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி நவம்பர் 5ஆம் தேதி திருக்கணிதப்படி நடைபெறுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். நவம்பர் 9ஆம் தேதி சனி மகா பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் விஷேசமானது. நவம்பர் 12ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறும். நவம்பர் 13 ஆம் தேதி கிருத்திகை விரதம். நவம்பர் 24 தேய்பிறை பிரதேஷம். நவம்பர் 26 கார்த்திகை அமாவாசை

    இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் என்னென்ன நடக்கும், யோகங்கள் தேடி வரப்போகிறது பாதிப்புகளுக்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

    தனுசு

    தனுசு

    தனுசு ராசிக்காரங்களுக்கு ஜென்ம குரு வந்திருக்கிறார். ஏற்கனவே சனி, கேது உங்க ராசியில் இருக்காங்க. இது பலமான மாதம் குரு உங்களுக்கு தைரியத்தை தருவார். குருவை செயல்படுத்த விடாமல் தடுத்தாலும் அதை முறியடித்து உங்களை முன்னேற்றுவார். நீங்க இந்த மாதம் தொல்லைகளை முறியடிப்பீர்கள். உங்க மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். திருமணம் முயற்சிகள் செய்யலாம். கவலைகள் விலகும் காலம். பிரச்சினைகள் தீரும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீங்க. வாக்கு நிறைவேற்ற முடியாம போயிரும். ஜென்ம குரு நல்ல நட்பு, திருமண வாழ்க்கையை ஏற்படுத்தி தருவார். வேலை வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்ய நல்ல மாதம். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் சுப விரையங்களை தருவார். செவ்வாய் உங்க ராசிக்கு 11ஆம் வீட்டிற்கு வருகிறார். லாபம் வரும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் வரும். சகோதரர்களால் ஆதாயம் வரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். ஆதரவு பெருகும். கஷ்டப்பட்டவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

    மகரம்

    மகரம்

    மகர ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் ஆறாம் வீட்டில் ராகு, ஒன்பதில் செவ்வாய், பத்தில் புதன் சூரியன், 11ல் சுக்கிரன், 12ல் குரு, சனி, கேது என கிரக சஞ்சாரம் உள்ளது. பயணங்களால் நன்மைகள் நடக்கும் சொத்துக்கள் வாங்குவீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். இடமாற்றம் ஏற்படும். சுப விரயங்களை செய்யலாம்.சுக்கிரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதன் சூரியன் 10ல் சஞ்சரிக்க செவ்வாய் பத்தாம் வீட்டிற்கு வருவார். வேலை செய்பவர்களுக்கு மாற்றம் ஏற்படும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும் சுப செலவுகளை செய்யுங்கள். 17ஆம் தேதி சூரியன் இடப்பெயர்ச்சி அடைந்து சுக்கிரன் உடன் இணைவார். இதுவும் பணவரவு லாபம் கிடைக்க நல்ல நேரம்தான். உங்க முன்னேற்றம் அதிகரிக்கும். உங்க எனர்ஜி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் கூடும். சனியால் ஏற்படும் மன உளைச்சல் நீங்கும். விரைய ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்க செலவுகளை நல்ல விசயத்திற்காக செலவு பண்ணுங்க. ஏழாம் இடத்தில் சந்திரன் சனியோடு சேர்ந்திருக்கிறார். கூடவே செவ்வாயின் பார்வையும் விழுகிறது. பயணத்தில கவனமாக இருங்க. வண்டியில போகும் போது ஜாக்கிரதையாக இருங்க. ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். ஆலய வழிபாடு ஏழைகளுக்கு தானம் கொடுப்பது மன நிம்மதியை அதிகரிக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதம். நேர்மையாக இருங்க நல்லதே நடக்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும்.

    கும்பம்

    கும்பம்

    கும்ப ராசி நேயர்களே இந்த மாதம் உங்க ராசிக்கு செவ்வாய் எட்டாம் வீட்டில் இருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் புதன், சூரியன், செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுகிறார். பத்தாம் வீட்டில் சுக்கிரன் பதினென்றாம் வீட்டில் குரு, சனி, கேது, பணம் சேமிக்கலாம், கடன்கள் வசூலாகும். சுகங்கள் கூடும். வேலைப்பளு நீங்கும். கல்யாண கனவுகள் கைகூடும் காதல் இனிக்கும், வேலையில் இருந்த பளு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பாக செயல்படுவீர்கள். குரு பார்வை புதன் வீட்டின் மீது அதாவது உங்க ராசிக்கு ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார். பொருளாதார உதவி கிடைக்கும். சனி குரு இணைந்திருப்பதால் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல வருமான கிடைக்கும். தொழிலில் லாபம் வரும். நோய்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களுக்கு உங்களால் உதவி கிடைக்கும். எதிரிகளை வெல்லக்கூடிய காலகட்டம் இது. உங்க உடல்நலத்தில அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்படும் கவனம் தேவை. சனியோடு குரு சேர்ந்திருக்கும் காலத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட்டு வந்த நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம். காரணம் குரு உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் கவலைகள் நீங்கும். இதுநாள் வரை வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம் உழைப்பை நம்புங்கள் நல்லதே நடக்கும்.

    மீனம்

    மீனம்

    மீனம் ராசி நேயர்களே நவம்பர் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நான்கில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் புதன், சூரியன் சஞ்சாரம் உள்ளது. குரு பத்தாம் வீட்டில் சனி கேது இணைகின்றனர். பிசினஸ் வாய்ப்பு தேடி வரும். கணவன் மனைவி உறவு விட்டுக்கொடுத்து போங்க. குரு இடப்பெயர்ச்சியால் வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய பதவிகள் தேடி வரும். வீடு மாற்றம் செய்யலாம். வேலை மாற்றம் செய்ய செவ்வாய் உதவி செய்வார். அரசு உதவிகள் கிடைக்கும். மன உளைச்சல் நீங்கும். பணவருமானம் வரும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் 17ஆம் தேதி இடமாற்றம் ஏற்படும் போது சில தடைகள் நீங்கும். வேலையில் இருப்பவர்கள் அவசர முடிவு எடுக்க வேண்டாம் உங்க உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு முடிவு பண்ணுங்க. பாக்யாதிபதியும் தனாதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு வரும் காலத்தில் பாதக ஸ்தானத்தில் அமரும் காலத்தில் முக்கிய முடிவுகளை தவிர்த்து விடுங்க அடுத்த மாதம் கிரகங்களின் மாற்றத்தால் நல்லது நடக்கும். அதிகம் கோபப்படாதீங்க, நிறைய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+