Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பர் மாதம் 2019: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்

நவ கிரகங்களின் சஞ்சாரத்தினைப் பொறுத்து நவம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம், சிம்மம், கன்னி, துலாம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் ம

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    30-10-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

    சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் 15 நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் செவ்வாய் பகவான் கன்னி ராசியில் 10 நாட்களும் பின்னர் துலாம் ராசிக்கு நகர்கிறார். புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து மாத இறுதியில் தனுசு ராசிக்கு நகர்கிறார். ராகு மீனம் ராசியிலும் சனி கேது குரு கூட்டணி தனுசு ராசியிலும் இணைந்துள்ளது.

    இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. கந்த சஷ்டி விரத காலம் இது நவம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி நவம்பர் 5ஆம் தேதி திருக்கணிதப்படி நடைபெறுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். நவம்பர் 9ஆம் தேதி சனி மகா பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் விஷேசமானது. நவம்பர் 12ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறும். நவம்பர் 13 ஆம் தேதி கிருத்திகை விரதம். நவம்பர் 24 தேய்பிறை பிரதேஷம். நவம்பர் 26 கார்த்திகை அமாவாசை

    இந்த கிரக சஞ்சாரத்தின்படி சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் என்னென்ன நடக்கும், பாதிப்புகளுக்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

    சந்தோஷமான மாதம்

    சந்தோஷமான மாதம்

    சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமான யோகமான மாதம். ஐந்தாம் வீடு வலுவடைந்துள்ளது. குழந்தைகளின் கல்வி, தொழில் வேலை முடியும். பிள்ளைகளின் திருமணம் நல்ல முறையில் நடைபெறும். செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதால் கோபமான பேச்சை தவிர்க்கவும். உங்க அன்பிற்கு உரியவர்கள் அக்கறை காட்டுவார்கள். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அதே போல வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் வம்பு வழக்குகள் சமாதானத்தில் முடியும்.

    பொன் பொருள் சேர்க்கை

    பொன் பொருள் சேர்க்கை

    சகோதரர்களிடம் இருந்த பிரச்சினைகள் முடியும். இடமாற்றம் ஏற்படும், கல்வியில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்க வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குரு பார்வையால் திருமண யோகம் கை கூடி வருகிறது. படிப்பு தொடர்பான விசயங்கள் தேடி வரும். உதவிகள் கிடைக்கும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தங்கம் வாங்கும் யோகம் வரப்போகிறது. இதுநாள் வரை ஏற்பட்டிருந்த மன அழுத்தங்கள் நீங்கும். வலிகள் இருக்கங்கள் நீங்கும். கலைத்துறையில் சார்ந்தவர்களுக்கு சுகம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சொத்துக்களை வாங்குவீர்கள். புது வீட்டிற்கு குடி போகலாம். சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். நவம்பர் மாதத்தில் ரொம்ப நல்ல விசயங்கள் நடக்கும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.

    நாக்கில் கவனம்

    நாக்கில் கவனம்

    கன்னி ராசிக்காரர்களே , இது நல்ல மாறுதலான மாதம் 12 நாட்களுக்குப் பின்னர் சூரியன் புதனோடு பயணிக்கிறார் செவ்வாய். வருமான ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். உங்களின் ரகசியங்களை பத்திரமாக வைக்கவும். நெகடிவ் ஆக பேசக்கூடாது. பேச்சில் கவனமாக இருங்க. வாக்கு கொடுத்து தடுமாறுவீர்கள். உங்க நாக்கே உங்களுக்கு எதிரியாகிவிடும் கவனம் தேவை. கர்ம ஸ்தானத்தில் உள்ள ராகு வேலையில் சில இடைஞ்சலை ஏற்படுத்துவார்.
    சூரியன் இரண்டில் அமர்ந்திருப்பதால் நாக்கை கட்டுப்படுத்தாவிட்டால் நல்ல வாய்ப்புகள் தவறிப் போகும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். கர்வத்தை விட்டு ஒழியுங்கள்.

    நல்ல வேலை கிடைக்கும்

    நல்ல வேலை கிடைக்கும்

    கர்மகாரகன் சனி பத்தாம் வீட்டை பார்க்கிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, படிப்புக்கு நல்ல வாய்ப்பு. வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. செவ்வாய் 12ஆம் தேதிக்கு மேல் இடப்பெயர்ச்சியாகி சூரியனுடன் இணைகிறார். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாயில் பிரச்சினை வரும் கவனம். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பண விவகாரங்கள் அற்புதமாக இருக்கும். குரு உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டினை பார்ப்பதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். அரசியல்வாதிகள் தேவையில்லாத கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நான்கில் குரு ஹம்சயோகத்தை தருகிறார். பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வரப்போகிறது. காலபைரவரை வழிபட நன்மைகள் நடக்கும்.

    உணவு விசயத்தில் எச்சரிக்கை

    உணவு விசயத்தில் எச்சரிக்கை

    சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே... இது உங்களுக்கு யோகமான மாதம் உங்க ராசியில் சூரியன் நீசமாகியிருக்கிறார். 12ஆம் அதிபதி புதன் உங்க ராசியிலும் தன ஸ்தானத்தில் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் சனி, கேது, குரு, என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இதுநாள் வரை உங்களுக்கு இருந்த மனநெருக்கடிகளில் இருந்து விடுதலை பெற்றுத்தருவார் குருபகவான். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    விரைய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வயிறு பாதிப்பு வரும். உணவு விசயத்தில் எச்சரிக்கை தேவை. ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்பு உள்ளது.

    பதவிகள் தேடி வரும்

    பதவிகள் தேடி வரும்

    10ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் உங்க ராசிக்குள் நகர்ந்து சூரியனுடன் நகர்கிறார். ராசியில் உள்ள உஷ்ண கிரகங்களால் உடல் நல பாதிப்பு வரும். ராசியில் புதன் இணைந்திருப்பதால் அப்பாவின் ஒத்துழைப்பு கொடுக்கும். மாணவர்களுக்கு அற்புதமாக வரும். பெண்களுக்கு தன வருமானம் பெருகும். முறைப்படி வரிகளை செலுத்துங்கள். கல்வியில் முன்னேற்றகரமான மாதம், 17ஆம் தேதிக்கு மேல் அதிகார பதவிகள் வந்து சேரும். காரணம் சுக்கிரன், சூரியன் இணைவினால் நன்மைகள் ஏற்படுகிறது. குருவினால் சகோதர சகோதரிகளுக்கு நன்மை நடக்கும். அதனால் உங்களுக்கு பலன்கள் தேடி வரும்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    செவ்வாய் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். 12ஆம் வீட்டில் சூரியன் புதன் சஞ்சரிக்கின்றனர். குடும்ப ஸ்தானத்தில் சனி, சந்திரன், கேது குரு சஞ்சாரம் உள்ளது. நவம்பர் மாதத்தில் நிறைய நன்மைகள் நடக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்வதால் நன்மைகள் நடக்கும். சுபங்கள் அதிகம் நடக்கும். சொன்னது நடக்கும். பணவரவும் தனவரவும் அதிகம் கிடைக்கும். பிரிந்தவர்கள் இணைவார்கள். காரணம் சுக்கிரன் உங்க ராசியில் அமர்ந்து ஏழாம் வீட்டினை பார்க்கிறார். உங்க ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். 10ஆம் தேதிக்கு மேல் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.

    பணவரவு அதிகரிக்கும்

    பணவரவு அதிகரிக்கும்

    17ஆம் தேதிக்கு மேல் சூரியன் உங்க ராசிக்கு வருகிறார். வெளிநாட்டில் பலருக்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த கருத்து மாறுபாடுகள் விலகும். சனியால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் விலகும் காரணம் குரு சனியோடு சேர்ந்திருக்கிறார். வாக்குவாதங்களை தவிருங்கள். சிலர் விலை மதிப்புமிக்க பொருட்களை வாங்குவீர்கள். முதுகு பிரச்சினைகள் வரலாம் கால்வலி பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை, கல்வியில் மாணவர்கள் கவனமாக இருங்க. விபரீத ராஜயோக காலம் என்றாலும் படிப்பில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பதவியில் மாற்றங்கள் ஏற்படும். கலைஞர்கள் புகழ் அடைவார்கள். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மொத்தத்தில் நவம்பர் மாதம் நன்மைகள் அதிகம் நடக்கும் மாதம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+