நவம்பர் மாதம் 2019: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகத்திற்கு ராசி பலன்கள் எப்படி
நவ கிரகங்களின் சஞ்சாரத்தினைப் பொறுத்து நவம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம், இந்த மாதம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு
சென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நகர்கிறார். புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து மாத இறுதியில் தனுசு ராசிக்கு நகர்கிறார். ராகு மீனம் ராசியிலும் சனி கேது குரு கூட்டணி தனுசு ராசியிலும் இணைந்துள்ளது.
இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. கந்த சஷ்டி விரத காலம் இது நவம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி நவம்பர் 5ஆம் தேதி திருக்கணிதப்படி நடைபெறுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். நவம்பர் 9ஆம் தேதி சனி மகா பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் விஷேசமானது. நவம்பர் 12ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறும். நவம்பர் 13 ஆம் தேதி கிருத்திகை விரதம். நவம்பர் 24 தேய்பிறை பிரதேஷம். நவம்பர் 26 கார்த்திகை அமாவாசை
இந்த கிரக சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் என்னென்ன நடக்கும், பாதிப்புகளுக்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

நோய்களால் பிரச்சினை
கல்யாணத்திற்கு மனசு அலைபாயும் அதே நேரம் 12ஆம் தேதி செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு நகரும் போது எதிர்ப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். உரசல்கள் வரும். செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை சந்தோஷங்களை ஏற்படுத்தும். வெளிநாடு யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரும். இதய பகுதியில் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்கவும். மருத்துவர்களை கவனிங்க. முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமைய மதுரை மீனாட்சியை வழிபடுங்க நல்லதே நடக்கும்.

வேலை கிடைக்கும்
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. உங்களுக்கு பொற்காலம் ஆரம்பித்து விட்டது. குருவின் பொன்னான பார்வை உங்களுக்கு கிடைத்து விட்டது. நீங்க சாமர்த்தியசாலிகள். பிரச்சினைகள் தீரும். கவலைகள் ஓடிப்போகும். அதிர்ஷ்டமும் அற்புதங்களும் நடைபெறும். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன் சந்தோஷங்களை தருவார். செவ்வாய் நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு செல்வது நல்ல காலம். எதிரிகள் பிரச்சினை தீரும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல லாபம் வரும்

தம்பதியர் பிரச்சினை
ராகுவினால் உங்களுக்கு பிரச்சினைகள் தீரும் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். புதிய வேலைகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நோய்கள் தீரும். கணவன் மனைவி இடையே பாசமும் நேசமும் அதிகரிக்கும். வெளிநாட்டு வருமானம் கூடும். ஆறாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் பெண்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான மாதம். சூரியன் நவம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ஆறாம் வீட்டிற்கு போகும் போது கவனமாக இருங்க யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே சந்தோஷமாக இருங்க சின்னச் சின்ன சண்டைகளைக் கூட பெரிது படுத்த வேண்டாம். மவுனமாக இருப்பது நல்லது. குரு பகவானை வணங்க நல்லது நடக்கும்.

உடல் நலத்தில் கவனம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. ராசிநாதன் சந்திரன் ஆறாம் வீட்டில் அமர்வது அற்புதம். 3ஆம் வீட்டில் செவ்வாய் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்கலாம். மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். செவ்வாய் பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு கிடைப்பதால் உடல் நலம் மன நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். வயிறு பிரச்சினைகளும் வரலாம். தலைசுற்றல் பித்த நோய்கள் வரும் கவனம் தேவை.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு
சூரியன் புதன் இணைவு பிரச்சினைகளை ஏற்படுத்தும். நல்ல வேலை கிடைக்கும். சுக்கிரன் ஐந்தில் சஞ்சரிப்பதால் காதல் தொடர்பான பிரச்சினைகள் மனதை அலைபாய வைக்கும். சிக்கிக்கொள்ளாதீர்கள். மனதை அலைபாய விடாதீர்கள். பெண்களுக்கு நல்ல மாதம் பிசினஸ் அமோகமாக நடக்கும் லாபம் வரும். கணவன் மனைவி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமணமாகி குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஸ்ரீரங்கம் ரங்காதரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் தல சயனப் பெருமாளையும் வணங்க நல்லது நடக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications