அக்டோபர் மாத ராசி பலன் 2023.. உருவாகும் புது கூட்டணி.. உடல் ஆரோக்கியத்தில் கவனம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதத்தில் பழைய கூட்டணி பிரிந்து புது கூட்டணி உருவாகிறது. சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசியில் பயணம் செய்வார். இந்த மாதத்தில் துலாம் ராசியில் உருவாகும் கூட்டணியால் சிலரது ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பொருளாதார நிலை எப்படி இருக்கும்? வேலையில் மாற்றம் வருமா என்று பார்க்கலாம்.

கிரக நிலை: மேஷத்தில் குரு ராகு, சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசியில் சூரியன், புதன், செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் சனி என இந்த மாதம் ஆரம்பத்தில் கிரக நிலைகள் இருந்தாலும் செவ்வாய் பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. ராகு கேது பெயர்ச்சியும் நிகழப்போகிறது. சூரியன் 18ஆம் தேதி ஐப்பசி மாதம் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த கிரக நிலைகள், கிரகங்களின் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

October matha rasi palan 2023: October month rasi palan for Rishabam Rasi

ரிஷபம்: அக்டோபர் மாதத்தில் ராசி நாதன் சுக்கிரன் 4 ஆம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நினைத்தது நிறைவேறும். மனதில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 5ஆம் வீடு வலிமையடைகிறது. வண்டி வாகனம் வாங்குவீர்கள். மண் மனை யோகம் கூடி வந்துள்ளது. வசதியான வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. சுப விரைய செலவுகள் வரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. குரு பகவான் விரைய ஸ்தானத்தில் ராகு உடன் இணைந்து இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சிறு உல்லாச பயணங்கள் செல்வீர்கள்.

பொற்காலம்: மாணவர்களுக்கு இது பொற்காலம் உயர்கல்வி யோகம் சாதகமாக உள்ளது. ஆசிரியர்கள் சொல்படி கேட்டு நடப்பது நல்லது. நல்ல முன்னேற்றம் கைகூடி வந்துள்ளது. புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைவதால் தன லாபத்தையும் வளர்ச்சியையும் தரப்போகிறார். தொழில் வியாபாரம் வளர்ச்சியடையும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து வாங்குவது நல்லது.

கிரகங்கள் கூட்டணி: 17ஆம் தேதி சூரியன் ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கேது, சூரியன், புதன், செவ்வாய் ஆறாம் வீட்டில் இணைகின்றனர். அதே நேரத்தில் குருவின் பார்வையும் கிடைப்பதால் பிரச்சினைகள் முடியும், தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். ஆறாம் இடத்து செவ்வாய் எதிரிகள் பிரச்சினைகளை நீக்கும் என்றாலும் குடும்பத்தில் வாய் துடுக்காக பேசாமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது.

October matha rasi palan 2023: October month rasi palan for Rishabam Rasi

குடும்பத்தில் கவனம்: கணவன் மனைவி உறவில் சலசலப்புகள் வந்து போகும். சண்டை சச்சரவுகள் வேண்டாம் அமைதியாக கடந்து விடுவது நல்லது. திருமணம், சுப காரியங்களுக்காக முடிவு செய்வதற்கு ஏற்ற கால கட்டம் இதுவல்ல. வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். தேவையில்லாமல் பேசி வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

ஆரோக்கியத்தில் அக்கறை: ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் செவ்வாய் அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து விடுவது நல்லது. வாழ்க்கை துணை, புது வேலை விசயமாக முடிவு எடுப்பவர்கள் அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் எடுத்து விடுவது நல்லது. மாத பிற்பகுதியில் கிரகங்களின் கூட்டணி சாதகமற்ற நிலையில் உள்ளதால் எடுக்கும் முடிவுகள் தவறாக போக வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாதத்தில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஆபத்தாக வாய்ப்புள்ளது கவனம் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+